Jawan Box Office: வசூலில் 1000 கோடியை நெருங்கிய ஜவான்... அட்லீயின் சாதனை... ஆச்சரியத்தில் கோலிவுட்

சென்னை: பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நடிப்பில் உருவான ஜவான், கடந்த 7ம் தேதி வெளியானது. அட்லீ இயக்கத்தில் பான் இந்தியா படமாக வெளியான ஜவான், ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது.

ஜவான் வெளியாகி முதல் ஐந்து நாட்களும் 100 கோடி வசூலை கடந்த பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்தது. இந்நிலையில், ஜவான் தற்போது ஆயிரம் கோடி பாக்ஸ் ஆபிஸ் கிளப்பில் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 Jawan Box Office: Shah Rukh Khans Jawan has reached Rs 1000 crore in Box Office

1000 கோடி பாக்ஸ் ஆபிஸ் கிளப்பில் ஜவான்: பாலிவுட் பாட்ஷா, கிங் கான் என ரசிகர்களால் கொண்டாடப்படும் ஷாருக்கான், இந்தாண்டு மட்டுமே இரண்டு மெஹா ஹிட் படங்களை கொடுத்துள்ளார். ஷாருக் நடிப்பில் கடந்த ஜனவரியில் வெளியான பதான், 1200 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலித்தது. அதேவேகத்தில் இந்த மாதம் 7ம் தேதி ஷாருக்கானின் ஜவான் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது.

கோலிவுட்டில் முதன்முறையாக பாலிவுட் சென்றுள்ள அட்லீ, ஜவான் படத்தை இயக்கியுள்ளார். ஷாருக்கானுடன் விஜய் சேதுபதி, நயன்தாரா, தீபிகா படுகோன், யோகி பாபு உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்திருந்தனர். அதேபோல், அனிருத்தும் இந்தப் படம் மூலம் முதன்முறையாக பாலிவுட்டில் அறிமுகமாகியுள்ளார். அப்பா, மகன் என இரட்டை வேடங்களில் ஷாருக்கான் நடித்துள்ள ஜவான், ஆக்‌ஷன் ஜானரில் உருவாகியிருந்தது.

300 கோடி பட்ஜெட்டில் உருவான ஜவான், ஆயிரம் கோடி வசூலிக்கும் என முன்பே கணிக்கப்பட்டது. அதனை கன்ஃபார்ம் செய்யும் விதமாக, ஜவான் இப்போது 1000 கோடி ரூபாய் பாக்ஸ் ஆபிஸ் கிளப்பில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 5 நாட்களுமே 100 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலித்த ஜவான். நான்கே நாட்களில் உலகம் முழுவதும் 500 கோடி ரூபாய் கலெக்‌ஷனை கடந்தது. முதல் வாரத்துக்குப் பின்னர் ஜவான் வசூலில் கொஞ்சம் பின்னடைவு ஏற்பட்டது.

ஆனாலும், ரசிகர்களிடம் தொடர்ந்து ஆதரவு இருந்ததால், ஜவான் கலெக்‌ஷன் 900 கோடியை கடந்தது. படக்குழு தரப்பில் இருந்து கடைசியாக வெளியான அப்டேட்டின் படி, 954 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், நேற்றைய வசூலையும் சேர்த்து, ஜவான் ஆயிரம் கோடி பாக்ஸ் ஆபிஸ் கிளப்பில் இணைந்துள்ளதாக பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால், ஜவான் படக்குழுவினர் உற்சாகத்தில் உள்ளனர்.

இதுவரை தமிழ்ப் படங்கள் எதுவும் ஆயிரம் கோடி வசூலை கடந்ததில்லை. ஆனால், முதன்முறையாக கோலிவுட்டில் இருந்து பாலிவுட் சென்ற அட்லீ, பாக்ஸ் ஆபிஸில் ஆயிரம் கோடி சாதனையை செய்து காட்டியுள்ளார். அதேநேரம், அட்லீ தனது அடுத்த படத்துக்கும் ரெடியாகிவிட்டது குறிப்பிடத்தக்கது. டோலிவுட் இயக்குநர் அல்லு அர்ஜுனுடன் இணையும் இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X