Jawan Box Office: ஜெயிலரை பந்தாடிய ஜவான்... முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் மட்டும் இத்தனை கோடியா..?
சென்னை: ஷருக்கான் நடிப்பில் அட்லீ இயக்கியுள்ள ஜவான் திரைப்படம் இன்று (செப்.7) வெளியாகியுள்ளது.
இந்தி, தமிழ், தெலுங்கு என மூன்று மொழிகளில் வெளியான ஜவான் படத்துக்கு முதல் நாளில் சிறப்பான ஓபனிங் கிடைத்துள்ளது.
அட்வான்ஸ் புக்கிங்கில் மட்டுமே 50 கோடி ரூபாய் வரை வசூலித்த ஜவான், முதல் நாளில் பதான், ஜெயிலர் படங்களின் சாதனையை முறியடித்துள்ளதாம்.
அதன்படி, ஜவான் திரைப்படத்தின் முதல் பாக்ஸ் ஆபிஸ் வசூல் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜவான் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல்: பாலிவுட் பாட்ஷா ஷாருக்கான் நடித்துள்ள ஜவான், இன்று (செப்.7) உலகம் முழுவதும் வெளியானது. அட்லீ இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இந்தப் படத்தை ஷாருக்கானே சொந்தமாக தயாரித்துள்ளார். ஷாருக்கானுடன் விஜய் சேதுபதி, நயன்தாரா, தீபிகா படுகோன், யோகி பாபு, ப்ரியாமணி உள்ளிட்ட பலர் ஜவானில் நடித்துள்ளனர். அட்லீயின் முதல் இந்தி படம் என்பதால், அதிக எதிர்பார்ப்பு காணப்பட்டது.
அதேபோல், ஷாருக்கான் நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் வெளியான பதான், பாக்ஸ் ஆபிஸில் ஆயிரம் கோடிகளுக்கும் மேல் வசூல் செய்திருந்தது. இதனால், ஜவான் திரைப்படமும் பாக்ஸ் ஆபிஸில் புதிய சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அதேநேரம் வழக்கம் போல, 'பாய்காட் ஜவான்' என்ற ஹேஷ்டேக்கும் கடந்த இரு தினங்களாக ட்ரெண்ட் ஆனது. இதையெல்லாம் முறியடித்து தற்போது சம்பவம் செய்துள்ளது ஜவான்.
ரசிகர்களிடம் பாசிட்டிவான விமர்சனங்களைப் பெற்றுள்ள ஜவான் படத்துக்கு அனைத்து ஏரியாக்களிலும் நல்ல ஓபனிங் கிடைத்துள்ளதாம். அட்வான்ஸ் புக்கிங் மூலமாக மட்டுமே 50 கோடி ரூபாய் வரை வசூலித்திருந்தது ஜவான். இந்நிலையில், தற்போது ஜவான் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, ஜவான் முதல் நாள் வசூல், 85 கோடி ரூபாய் என சொல்லப்படுகிறது. இது ஷாருக்கானின் பதான், ரஜினியின் ஜெயிலர் படங்களின் முதல் நாள் வசூலை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
பதான் திரைப்படம் முதல் நாளில் 73 கோடி ரூபாய் வரை வசூல் செய்தது. அதேபோல், ரஜினியின் ஜெயிலர் முதல் நாளில் 60 கோடி வரை கலெக்ஷன் செய்ததாக சொல்லப்படுகிறது. இந்த இரண்டு படங்களின் சாதனையையும் ஜவான் பிரேக் செய்துள்ளதாம். இந்தியில் மட்டும் 65 கோடி வரை வசூலித்துள்ள ஜவான், தமிழ், தெலுங்கு மொழிகளில் தலா 4 கோடி கலெக்ஷன் செய்துள்ளது. இந்த கணக்கின் படி இந்தியாவில் மொத்தம் 73 ரூபாய் கோடி வசூல் செய்துள்ளது ஜவான் திரைப்படம்.
அதேநேரம் உலகம் முழுவதும் சேர்த்து ஜவான் படத்தின் வசூல் 85 கோடி என்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. மும்பை, டெல்லி, கொல்கத்தா, ஹைதராபாத், பெங்களூரு, சென்னை போன்ற மெட்ரோ சிட்டிகளில் ஜவானுக்கு நல்ல ஓபனிங் கிடைத்துள்ளதாம். இதுவரை கிடைத்த தகவல்களின் அடிப்படையில், ஷாருக்கானின் ஜவான் முதல் நாளிலேயே 100 கோடி ரூபாய் வசூலை நெருங்கியுள்ளதாக தெரிகிறது. இதனால் இந்த வாரம் முடிவிற்குள், 200 கோடி வசூலை கடந்துவிடும் என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications











