Jawan Box Office: நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ.. ஜவான் அதிகாரப்பூர்வ வசூல் ரிப்போர்ட் வந்தாச்சு!
சென்னை: ஷாருக்கானின் ஜவான் திரைப்படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வார நாட்களில் அதிரடியாக சரிவை சந்தித்து வந்த நிலையில், மீண்டும் அதன் வசூல் அதிகரித்து இருப்பதாக ரெட் சில்லீஸ் நிறுவனம் தற்போது பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்டை வெளியிட்டுள்ளது.
6 நாட்களில் ஜவான் திரைப்படம் 600 கோடி ரூபாய் வசூல் ஈட்டிய நிலையில், வார நாட்களில் அதன் வசூல் படிப்படியாக குறைய தொடங்கியதாக அபிஷியல் அப்டேட்டை பார்த்து பாலிவுட் சற்றே பதைபதைப்புக்கு உள்ளானது.

ஆயிரம் கோடி ரூபாய் வசூல் எல்லாம் ஜவான் திரைப்படம் என்றும், அதிகபட்சமாக வேலூர் முதல் 800 கோடி ரூபாய் தான் வரும் என்றும் பாக்ஸ் ஆபிஸ் டிராக்கர்கள் திடீரென பல்டி அடித்தனர். ஆனால் ஷாருக்கான் பாக்ஸ் ஆபீஸின் பாப் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்தது போல தற்போது அதிரடியாக ஏழுநாள் வசூல் ரிப்போர்ட்டை வெளியிட்டுள்ளனர்.
ஜவான் அதிகாரப்பூர்வ வசூல்: அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துள்ள ஜவான் திரைப்படம் கடந்த செப்டம்பர் 7ம் தேதி வெளியான நிலையில், செப்டம்பர் 13-ஆம் தேதி வரை ஒட்டுமொத்தமாக 660 கோடி ரூபாய் வசூல் ஈட்டியுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது.
வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை இதேபோன்ற வசூல் வேட்டை நிலவினால், அடுத்து மீண்டும் விடுமுறை நாட்கள் ஆரம்பிக்க தொடங்கிவிடும். சனி, ஞாயிறு மட்டுமின்றி விநாயகர் சதுர்த்தி திங்கட்கிழமை வரும் நிலையில் தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை என்பதால் ஷாருக்கானின் ஜவான் திரைப்படத்திற்கு மிகப்பெரிய ஜாக்பாட்டாக இரண்டாவது வாரம் மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
1000 கோடி உறுதி: இரண்டாவது வாரத்தின் முடிவிலேயே ஷாருக்கானின் ஜவான் திரைப்படம் 800 கோடிக்கும் மேல் வசூல் ஈட்டும் என்றும் ஆயிரம் கோடி ரூபாயை அசால்ட்டாக தாண்டுவது உறுதி என ஷாருக்கான் ரசிகர்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் ஜவான் திரைப்படத்தின் ஹாஷ்டேக்குகளை போட்டு ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

ஷாருக்கானுக்கு ஜோடியாக இந்த படத்தில் நயன்தாரா நடித்து முதன்முதலாக பாலிவுட்டில் அறிமுகம் ஆகியுள்ளார். நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமா ஹீரோக்களுக்கு வில்லனாக நடித்து வந்த நிலையில், இந்தப் படத்தின் மூலம் கிங் கானுக்கு வில்லனாக மாறியுள்ளார். நடிகை பிரியாமணி, சஞ்சய் தத், யோகி பாபு உள்ளிட்ட பலர் ஜவான் படத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
கூடிய விரைவிலேயே ஜவான் திரைப்படத்தின் சக்சஸ் பார்ட்டி மற்றும் வெற்றி விழா நிகழ்ச்சிகள் நடைபெறும் என்றும் தெரிகிறது. அடுத்ததாக ஷாருக்கான் இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் நடிகை டாப்ஸி உடன் இணைந்து டன்கி படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











