Jawan Box Office: பாதிக்கு பாதியாக குறைந்த ஷாருக்கானின் ஜவான் பட வசூல்.. 5வது நாளில் இவ்ளோதானா?
மும்பை: அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்த ஜவான் திரைப்படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் அதிரடியாக பாதிக்கும் மேல் குறைந்து விட்டது ரசிகர்களை ஷாக் ஆக்கி உள்ளது.
கடந்த வியாழக்கிழமை வெளியான ஜவான் திரைப்படம் ஞாயிற்றுக்கிழமை வரை 4 நாட்கள் மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்தியது. தினம்தோறும் 100 கோடிக்கும் அதிகமாக வசூல் ஈட்டி வந்த நிலையில், திங்கட்கிழமையான நேற்று அதிரடியாக வசூல் எதிர்பார்த்ததை விட வேகமாக 50 கோடியளவில் குறைந்து விட்டது.

தினமும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு வரும் ஷாருக்கானின் தயாரிப்பு நிறுவனம் தற்போது 5வது நாள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ஜவான் 5 நாள் வசூல்: ஷாருக்கான், நயன்தாரா, விஜய்சேதுபதி, பிரியாமணி நடிப்பில் வெளியான ஜவான் திரைப்படத்துக்கு அனிருத் அட்டகாசமாக இசையமைத்து இருந்தார். தினமும் 100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து செஞ்சரி அடித்துக் கொண்டிருந்த ஷாருக்கான் 5வது நாளில் அரை சதம் மட்டுமே அடித்திருக்கிறார்.
5 நாட்களில் ஜவான் திரைப்படம் உலகளவில் 600 கோடியை தாண்டியிருக்கும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு சற்றே ஷாக் கொடுக்கும் விதமாக படத்தின் வசூல் 574.89 கோடி தான் என்கிற அஃபிஷியல் அப்டேட் வெளியாகி உள்ளது.
பாதிக்கு பாதியாக குறைந்து விட்டது: ஜவான் திரைப்படம் ஞாயிற்றுக்கிழமை வரை 520 கோடி வசூல் ஈட்டியிருந்த நிலையில், கூடுதலாக 5வது நாளில் வெறும் 54 கோடி ரூபாய் வசூலை மட்டுமே உலகளவில் ஈட்டியுள்ளது. தொடர்ந்து 10 நாட்களும் செஞ்சரி அடிப்பார் ஷாருக்கான் என்றும் 1000 கோடி வசூலை தாண்டும் என கணிக்கப்பட்ட நிலையில், அதிரடியாக வசூல் வீக் டேஸ் காரணமாக குறையத் தொடங்கி உள்ளது.
இரண்டாம் வாரத்தில் சூடு பிடிக்குமா: ஜவான் திரைப்படம் 2வது வாரத்தில் மீண்டும் சூடு பிடித்தால் மட்டுமே 1000 கோடி வசூலை அடையும் என்றும் அட்வான்ஸ் புக்கிங் செய்து பார்த்த ரசிகர்கள் எல்லாம் ரிப்பீட் மோடில் படம் பார்க்க வரவில்லை என்றால் வசூல் படிப்படியாக குறைந்து அதிகபட்சமாக 800 கோடியுடன் வந்து நிற்கும் என்றும் கூறுகின்றனர்.
ஓடிடி ரிலீஸ்: ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடியில் 4 வாரத்திலேயே வெளியான நிலையில், அதற்கு போட்டியாக ஷாருக்கானின் ஜவான் திரைப்படத்தையும் 4 வாரத்தில் வெளியிட நெட்பிளிக்ஸ் முடிவு செய்திருப்பதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. அக்டோபர் 5ம் தேதியே ஓடிடியில் ஷாருக்கான் படம் வெளியாக போவதாக தகவல்கள் தீயாய் பரவி வருவதும் படத்தின் வசூல் வேட்டைக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என கருதுகின்றனர்.


Click it and Unblock the Notifications











