உருகி உருகி போனதடி..என் உள்ளம் யான் நீயே.. கணவருடன் பிரியா அட்லீயின் க்யூட் போட்டோஸ்!
சென்னை: ஜவான் படத்தின் மூலம் பாலிவுட்டை மிரளவிட்ட இயக்குநர் அட்லீ தன்னுடைய மனைவி பிரியாவுடன் தாதா சாகேப் பால்கே விருது நிகழ்ச்சிக்கு சென்ற போது எடுத்து கொண்ட புகைப்படங்களை பிரியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கமெண்டுகளை குவித்து இருவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

நடிகை பிரியா கனா காணும் காலங்கள் சீரியல் மற்றும் சூர்யா நடித்த சிங்கம் படத்தில் அனுஷ்காவின் தங்கையாக நடித்துக்கொண்டு இருந்தார். பிரியாவும், சினிமாவில் வாய்ப்பு தேடிக்கொண்டிருந்த போது, அட்லீயும் பட வாய்ப்பு தேடிக்கொண்டிருந்தார். அப்போது முகப்புத்தகம் என்னும் குறும்படத்தை இயக்கினார். இதில், பிரியா கதாநாயகியாக நடித்தார். அப்போதில் இருந்தே இருவரும் நல்ல நண்பர்களாக பழகி வந்தனர்.

முகப்புத்தகம் குறும்படத்தின் மூலம் அட்லீக்கு இயக்குநர் ஷங்கரின் உதவி இயக்குநராகும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இதையடுத்து,எந்திரன், நண்பன் ஆகிய இரண்டு படங்களிலும் ஷங்கரின் உதவி இயக்குநராக அட்லீ பணியாற்றினார். பின், ராஜா ராணி படத்தை இயக்கி இயக்குநராக மாறினார். இவரின் முதல் படமே மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று அட்லீக்கு நல்ல பெயர் கிடைத்தது. ராஜா ராணியின் வெற்றிக்குப்பின், பிரியாவை பார்த்த அட்லீயிடம் பிரியா யதார்த்தமாகக வீட்டில் கல்யாணத்தை பற்றி பேசுவதாக சொல்ல, அட்லீ தனது ஜாதகத்தையும் தரவா என கேட்டு காதலை நாசுக்காக சொல்லி இருக்கிறார்.

இயக்குநர் அட்லீ: இதையடுத்து பெற்றோரின் சம்மதத்துடன் 2014ஆம் ஆண்டு அட்லீ பிரியா திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்குப் பின் நடிகர் விஜயை வைத்து தெறி, மெர்சல், பிகில் ஆகியப் படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் டாப் இயக்குநர்கள் லிஸ்ட்டில் இடம் பிடித்தார் அட்லீ. பாலிவுட் ஸ்டார் ஷாருக்கானை வைத்து ஜவான் படத்தை இயக்கி அதில் வெற்றியும் அடைந்தார். இந்த படம் 1200 கோடி வரை வசூல் சாதனை படைத்தது.

நான்கு விருது: இந்த படம் அண்மையில் நடந்த தாதா சாகேப் பால்கே விருது விழாவில் 4 விருதுகளை வென்றது. சிறந்த நடிகருக்கான விருது ஷாருக்கானுக்கும், சிறந்த நடிகையாக நயன்தாரா, சிறந்த இசையமைப்பாளர் அனிருத்,சிறநத இயக்குனர் அட்லீ என நான்கு விருதுகளை பெற்றது. இந்த விழாவில் அட்லீ தனது மனைவியும் கலந்து கொண்டார். முன்னதாக அவர், பிளாக் அண்ட் பிளாக்கில் எடுத்துக்கொண்ட போட்டோவை பிரியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளனர். அந்த போட்டோவைப் பார்த்த ரசிகர்கள் அழகான க்யூட் கப்பிளான தம்பதிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











