தளபதி, ஷாரூக்கை வைத்து சம்பவம் செய்த அட்லீக்கு பிறந்த நாள்.. வாயடைக்க வைக்கும் சொத்து மதிப்பு விபரம்
சென்னை: தமிழ் சினிமாவில் பக்கா கமர்சியல் டைரக்டர் என்று பெயர் எடுத்தவர் மட்டும் இல்லாமல் பாக்ஸ் ஆபீஸில் நூற்றுக்கணக்கான கோடிகளை வாரி குவிக்கும் இயக்குநர் என்றும் பெயரெடுத்தவர் அட்லீ. ஷங்கரிடம் உதவி இயக்குநராக இருந்தவர் அட்லீ. இவர் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான ராஜா ராணி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானார். தனது அட்டகாசமான இயக்கத்தால் அட்லீ படத்துக்கு போனாலே ஜாலியா ஒரு படம் பார்த்துட்டு வரலாம் பா என்கின்ற உணர்வையும் எதாவது ஒரு சோசியல் மெசேஜ் இருக்கும் என்கின்ற எண்ணத்தையும் சினிமா ரசிகர்களுக்கு ஏற்படுத்தி விட்டார். இன்றைக்கு அட்லீ தனது 38வது பிறந்த நாளைக் கொண்டாடுகின்றார். இந்நிலையில் அவரது சொத்து மதிப்பு குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.
ராஜா ராணிக்கு பின்னர் இயக்குநர் அட்லீ நடிகர் விஜய்-யை வைத்து தெறி, அதன் பின்னர் மெர்சல் மற்றும் அதை அடுத்து பிகில் என மூன்று படங்களை தொடர்ந்து இயக்கினார். அட்லீ இயக்கிய நான்கு படங்களும் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. குறிப்பாக மெர்சல் திரைப்படத்தில் ஜிஎஸ்டிக்கு எதிரான வசனங்கள் பாஜக ஆதரவாளர்கள் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதன் காரணமாகவும் மெர்சல் திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

விஜய்-யை வைத்து தெறி, மெர்சல் மற்றும் பிகில் ஆகிய மூன்று படங்களிலும் மிகப்பெரிய ஹிட் கொடுத்ததால் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் அட்லீயை அழைத்து தனக்கொரு படம் செய்யுமாறு கேட்டுக் கொண்டார். "ஷாருக்கானே சொல்றாரு அவருக்கு ஒரு படம் பண்ணிருவோம்" என்கின்ற நம்பிக்கையில் ஷாருக்கானை வைத்து ஜவான் என்ற பிளாக்பஸ்டர் படத்தை இயக்கினார் அட்லீ. இந்தப் படம் ஹிந்தி திரை உலகிலேயே இதுவரை பேசாத அரசியலை பேசியது மட்டும் இல்லாமல் வசூலிலும் மிகப்பெரிய வெற்றி பெற்றது. பாக்ஸ் ஆபிஸில் ரூபாய் ஆயிரம் கோடி வசூல் செய்தது ஜவான். இந்த படத்தில் நயன்தாரா, யோகி பாபு, விஜய் சேதுபதி உள்ளிட்ட தென்னிந்திய பிரபலங்களும் நடித்திருந்தனர். அனிருத் இசையமைத்திருந்தார். நடந்து முடிந்த மக்களவைப் பொதுத் தேர்தலில் பாஜக பெரும்பான்மையை இழக்க காரணங்களில் ஒன்றாக ஜவான் படத்தைக் கூறினார்.
மிகப்பெரிய இயக்குநர்: ஜவான் படத்தின் பிரம்மாண்ட வெற்றியும் ஆயிரம் கோடி ரூபாய் பாக்ஸ் ஆபிஸ் வசூலும் அட்லீயை ஹிந்தி திரை உலகில் மிகப்பெரிய இயக்குநர் பட்டியலில் இடம்பெறச் செய்தது. இதனால் பாலிவுட் சூப்பர் ஸ்டார்கள் அட்லீயை அழைத்து எனக்கொரு கதை பண்ணுங்க என வரிசையாக நிற்கும் அளவிற்கு சூழல் ஏற்பட்டது. இந்நிலையில் அல்லு அர்ஜுனை வைத்து அட்லீ படம் இயக்கப் போவதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருந்த நிலையில் அந்தப் படம் கைவிடப்பட்டதாகவும் செய்திகள் உலா வர தொடங்கியது.
ஜவான்: பாலிவுட்டில் மிகவும் முக்கியமான இயக்குநராக அட்லீ உருவெடுத்துள்ளார். தான் பாலிவுட்டில் கால் வைத்த முதல் படத்திலேயே, ரூபாய் ஆயிரம் கோடி வசூலைக் குவித்து அட்டகாசப்படுத்தினார். இது மட்டும் இல்லாமல், பாலிவுட்டில் இவரது இயக்கத்தில் வெளியான ஜவான் படத்தின் தாக்கத்தினால்தான், நடந்து முடிந்த மக்களவைப் பொதுத் தேர்தலில் பாஜகவுக்கு பெருத்த அடி விழுந்ததாக பேச்சுகளும் எழுந்தது. இதற்கு காரணம் ஜவான் படம் பேசிய அரசியல் எனலாம்.
சொத்து மதிப்பு: இன்று தனது 38வது பிறந்த நாளைக் கொண்டாடும் அட்லீ ஒரு படத்தினை இயக்க குறைந்த பட்சம் ரூபாய் 30 கோடி சம்பளம் வாங்குகின்றார் என திரைத்துறையில் செய்திகள் உலா வருகின்றது. கடைசியாக அவர் இயக்கிய ஜவான் படத்திற்கு அவர் வாங்கிய சம்பளம் ரூபாய் 30 கோடி என கூறப்படுகின்றது. ஜவான் படத்திற்கு முன்னர் தமிழ் சினிமாவில் இவரது சம்பளம் என்பது குறைவுதான். அதேபோல் இவரது சொத்து மதிப்பு அமெரிக்க டாலரில் கணக்கிட்டால் கிட்டத்தட்ட, 5 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை இருக்கும் என கூறப்படுகின்றது. அதாவது இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட 42 கோடிகள் வரை இருக்கும் என கூறப்படுகின்றது. இதுமட்டும் இல்லாமல் இவரிடத்தில் சொகுசுக் கார்கள், தமிழ்நாட்டில் சொகுசு பங்களாக்கள் என அது ஒரு தனி லிஸ்ட்டே உள்ளதாம். பிறந்தநாள் வாழ்த்துகள் அட்லீ.


Click it and Unblock the Notifications











