Atlee - கிரெடிட் கொடுத்தால் 2,000 படங்களுக்கு கொடுக்க வேண்டும்.. ஜவான் இயக்குநர் அட்லீ ஷாக் ரிப்ளை
சென்னை: Atlee (அட்லீ) தான் கிரெடிட் கொடுத்தால் 2,000 படங்களுக்கு கிரெடிட் கொடுக்க வேண்டும் என ஜவான் பட இயக்குநர் அட்லீ பேசியது ட்ரெண்டாகியுள்ளது.
ராஜா ராணி படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் அட்லீ. முதல் படமே மெகா ஹிட்டாகி நூறு நாட்கள் ஓடியது. படத்தின் மேக்கிங்கும் அட்டகாசமாக இருக்கிறது என்று பேசப்பட்டது. அதேசமயம் அந்தப் படம் அப்படியே மௌன ராகம் படத்தின் அப்டேட் வெர்ஷன் என்ற விமர்சனம் எழுந்தது. ஆனால் அதுகுறித்து அட்லீ எந்த பதிலும் சொல்லாமல் இருந்தார்.

தொடர் காப்பிகள்: இதனையடுத்து அவர் இயக்கிய தெறி, மெர்சல், பிகில் ஆகிய படங்களில் பிகிலை தவிர்த்து தெறியும், மெர்சலும் மெகா ஹிட்டாகின. ஆனால் தெறி படம் சத்ரியன் படத்தின் காப்பி என்றும், மெர்சல் படம் அபூர்வ சகோதரர்கள் படத்தின் காப்பி என்றும், பிகில் சக் தே இந்தியா படத்தின் காப்பி என்றும் விமர்சனம் எழுந்தது. அதுமட்டுமின்றி பல காட்சிகளும் அப்படியே இருப்பதாக ரசிகர்கள் ஓபனாக பேச ஆரம்பித்தனர்.
இவ்வளவா?: ஒரு இயக்குநர் ஒரு படத்தில் காப்பி அடிக்கலாம் ஆனால் தான் எடுக்கும் ஒவ்வொரு படத்தையும் காப்பி அடிக்கக்கூடாது. அட்லீயால் சொந்தமாக ஒரு லைனைக்கூட யோசிக்க முடியாது என்று ஓபனாகவே பேச ஆரம்பித்தனர். இதுகுறித்து பேசியிருந்த அட்லீ 7 ஸ்வரங்களுக்குள்தானே ட்யூன் போட முடியும் என்று பலே விளக்கம் அளித்தார். அதற்கும் ரசிகர்கள், அந்த 7 ஸ்வரங்களையும் வெவ்வேறு வாத்தியங்களை யூஸ் செய்து போட வேண்டியதுதானே என பதலடி கொடுத்தனர்.
மூவி மிக்சர்: இப்படி பல விமர்சனங்களை சந்தித்தாலும் அட்லீ தற்போது ஹிந்தியில் என்ட்ரி கொடுத்துள்ளார். அவர் இயக்கி ஷாருக்கான் நடித்திருக்கும் ஜவான் படம் இதுவரை 600 கோடி ரூபாயை வசூலித்திருக்கிறது. ஆனால் இந்தப் படமும் காப்பி என்ற விமர்சனத்தை சந்தித்திருக்கிறது. உச்சக்கட்டம் என்னவென்றால் இந்தப் படத்தில் கிட்டத்தட்ட 20க்கும் மேற்பட்ட படங்கள் காப்பி அடிக்கப்பட்டிருப்பதாகவும்; தன்னுடைய படத்திலிருந்தே உருவியிருக்கிறார் அட்லீ என்றும் வெளுக்க ஆரம்பித்தனர் ரசிகர்கள்.

ட்ரெண்டாகும் பேச்சு: இந்நிலையில் தன் மீது வைக்கப்படும் விமர்சனம் குறித்து அட்லீ முன்னர் பேசியிருந்தது இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. அவர் பேசுகையில், "நான் பார்க்கின்ற ஒவ்வொரு தமிழ் படமும் எனக்குள் தாக்கத்தை ஏற்படுத்தும். அதனால் கிரெடிட் கொடுக்க வேண்டும் என்றால் கிட்டத்தட்ட 2,000 படங்களுக்கு கிரெடிட் கொடுக்க வேண்டும். படங்கள் மட்டுமின்றி பல விஷயங்கள் எனக்குள் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
நம்பிக்கை இல்லாததை குறிக்கும்: யாரோ ஏதோ சொல்கிறார்கள் என்பதற்காக ஒரு படத்துக்கு கிரெடிட் கொடுப்பது நமக்கு நம் மீது நம்பிக்கை இல்லாததை குறிக்கும். ஆனால் என் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. இந்த கண்டெண்ட் என்னுடையது என்று நம்புவேன். உணர்வேன். நான் அந்த படங்களை பார்த்திருக்கிறேன் என்பதும் எனக்கு பிடித்திருந்தது என்பதும் உண்மைதான். ஆனால் அதிலிருந்து என்னுடைய கண்டெண்ட் இன்ஸ்பையராகி வரவில்லை" என்றார்.


Click it and Unblock the Notifications











