Atlee: நிறத்தை வைத்து கேலி.. நான் பட்ட அவமானங்கள்.. மனம் திறந்த அட்லி!
சென்னை: பாலிவுட் ஸ்டார் ஷாருக்கானை வைத்து ஜவான் என்ற பிளாக் பஸ்டர் ஹிட் திரைப்படத்தை கொடுத்த அட்லி, உருவ கேலியால் பட்ட கஷ்டங்கள் குறித்து பேட்டியில் தெரிவித்துள்ளார்.
தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனர் அட்லி சினிமாவிற்கு வந்த குறுகிய காலத்திலேயே பாலிவுட்டில் தனது தடத்தை பதித்துள்ளார்.

இயக்குநர் அட்லி பிரபல தொகுப்பாளர் கோபிநாத் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.
இயக்குநர் அட்லி: அந்த பேட்டியில், நான் சாப்பாட்டை விட அதிகமான கேலி, கிண்டலை அனுபவித்து இருக்கிறேன். நான் 8வது படிக்கும் போது இயக்குநர் ஆவேன் என்று சொன்னேன் அப்போது என் நண்பர்கள் என்னைப்பார்த்து சிரித்தார்கள். ஆனால், இப்போது எப்படிடா அப்போவே சொன்ன என்று கேட்கிறார்கள்.
அவமானப்படுத்தினார்கள்: அதேபோல துணை இயக்குநராக நான் இருந்த போது, நான் சாதிப்பேனே மாட்டேனா என்கிற சர்ச்சை என்னை சுற்றி இருந்தவர்களிடம் அதிகமாக இருந்தது. நான் துணை இயக்குநராக பயிற்சி எடுத்துக்கொண்டிருந்த போது, என் சாப்பாட்டு தட்டை பிடுங்கிவீசி அங்கே போய் சாப்பிடு என்றார்கள். என் வாழ்க்கையில் இப்படி எல்லாம் நடக்கும் என்று நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை.
கடந்து சென்றேன்: வாழ்க்கையில் இதை விட வேற என்ன பெரிய அவமானம் இருக்க முடியாது. ஆனால், அதை நான் அவமானமாக நினைக்கவில்லை. இங்கே இப்படித்தான் நடக்கும் என்று நினைத்துக்கொண்டு கடந்து சென்றேன். எனக்கு நடந்த அனைத்து அவமானங்களையும் நான் தூக்கிக்கொண்டு சுமக்கவில்லை. ஒகே அடுத்து என்ன என்று தாண்டி வந்து இருக்கிறேன்.
உருவா கேலி: அதே போல என்னை குறித்து வரும் கேலிகளை நான் இரண்டு விதமாக பார்க்கிறேன். சிலர் நமக்கு அட்வைஸ் பண்ணுவாங்க அதை நான் ஏற்றுக்கொண்டு இருக்கிறேன். சிலர் என் உருவத்தை, நிறத்தையும் வைத்து கேலி செய்வார்கள், அவருடைய எண்ணம் சுமாரா இருப்பவன் சாதிக்க மாட்டான் என்று அவர்களின் எண்ணம். என் அம்மா மட்டும்தான் என்னை ஒரு சூப்பர் ஸ்டாராக பார்த்தார்கள் என்று அந்த இயக்குநர் அட்லி அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











