அவர் பேரு அட்லீ இல்லை டெட்லீ.. சும்மா தீயாய் பறக்கும் மீம்ஸ்.. விஜய்யவே போட்டுத் தள்ளியவராச்சே!

சென்னை: இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான், நயன்தாரா நடித்து அனிருத் இசையமைத்துள்ள ஜவான் திரைப்படம் நாளை வெளியாக உள்ள நிலையில், அட்லீ குறித்த மீம் ஒன்று தீயாக பரவி வருகிறது.

ஷங்கரின் அசிஸ்டன்ட் டைரக்டரான அட்லீ ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். மணிரத்னத்தின் மெளன ராகம் படத்தின் காப்பி என அப்போதே கடுமையாக விமர்சிக்கப்பட்ட நிலையிலும், நடிகர் விஜய் தெறி படத்தை இயக்கும் வாய்ப்பை வழங்கினார்.

Jawan Director Atlee is Deadly meme trending in social media

தெறி திரைப்படம் வெளியானதும் விஜயகாந்தின் சத்ரியன் மற்றும் ரஜினிகாந்தின் பாட்ஷா படங்களின் கலவை தான் தெறி என கிண்டல் செய்தனர். மேலும், காப்பி அடித்தாலும் ரசிகர்கள் கொண்டாடும் வகையில் படம் எடுக்கிறார் என அட்லீக்கு ஆதரவும் பெருகிறது.

காப்பி சர்ச்சை: விமர்சனங்களை எல்லாம் கண்டு கொள்ளாமல் பாக்ஸ் ஆபிஸில் படம் ஹிட் அடித்த நிலையில், மீண்டும் அட்லீயுடன் விஜய் இணைந்தார். மெர்சல் படம் அப்படியே அபூர்வ சகோதரர்களின் காப்பி என கடுமையாக விமர்சிக்கப்பட்டது. அந்த படத்தைத் தொடர்ந்து மீண்டும் விஜய் அட்லீயுடன் இணைந்த பிகில் திரைப்படம் ஷாருக்கானி சக்தே படத்தின் காப்பி என கலாய்க்கப்பட்டது.

இந்த படங்களில் எல்லாம் ஆக்‌ஷன், காமெடியுடன் சேர்த்து எமோஷனல் கனெக்ட்டையும் இயக்குனர் அட்லீ சிறப்பாகவே செய்து விடும் நிலையில், அவரது படங்கள் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடித்து வருகின்றன.

Jawan Director Atlee is Deadly meme trending in social media

அட்லீ இல்லை டெட்லீ: ராஜா ராணி படத்தில் நஸ்ரியாவை போட்டுத் தள்ளிய அட்லீ, தெறி படத்தில் சமந்தாவையும் மெர்சல் படத்தில் அப்பா விஜய் மற்றும் நித்யா மேனனையும் கடைசியாக பிகில் படத்தில் அப்பா ராயப்பனையும் அநியாயமாக அட்லீ போட்டுத் தள்ளி விட்டார்.

உண்மையில் அவர் அட்லீயே இல்லை டெட்லீ என ரசிகர் ஒருவர் போட்டுள்ள மீம் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. ஷாருக்கானின் ஜவான் படத்தில் விஜய்சேதுபதியை வைத்து அட்லீ தீபிகா படுகோனை போட்டுத் தள்ளப் போவது கன்ஃபார்ம் என்றும் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

கடைசி நேரம் வரை விஜய் ரசிகர்கள் ஜவான் படத்தில் தளபதி விஜய் நிச்சயம் சர்ப்ரைஸ் கேமியோ ரோலில் நடித்திருப்பார் என நம்பி வருகின்றனர். உண்மை என்னவென்பது நாளை தெரிந்து விடும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X