Atlee: என்னை சினிமாவில் ஜொலிக்க வைத்த அம்மா.. அவங்க தான் சூப்பர் ஸ்டார்..அட்லீ பேட்டி!

சென்னை: என்னை சினிமாவில் ஜொலிக்க வைத்த என் அம்மா தான் சூப்பர் ஸ்டார் என்று அட்லீ பேட்டியில் தெரிவித்துள்ளார்.

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனர் அட்லீ சினிமாவிற்கு வந்த குறுகிய காலத்திலேயே பாலிவுட்டில் தனது தடத்தை பதித்துள்ளார்.

Jawan director Atlee talks warmly about her mother

இவர் இயக்கத்தில் அண்மையில் வெளியான ஜவான் ஆயிரம் கோடியை வசூலித்தது. தற்போது இவர், பிரபல யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.

அட்லீ பேட்டி: அதில், துணை இயக்குநராக நான் இருந்த போது, நான் சாதிப்பேனே மாட்டேனா என்கிற எண்ணம், என்னை சுற்றி இருந்தவர்களிடம் அதிகமாக இருந்தது. நான் துணை இயக்குநராக பயிற்சி எடுத்துக்கொண்டிருந்த போது, என் சாப்பாட்டு தட்டை தூக்கி வீசி அங்கே போய் சாப்பிடு என்றார்கள். என் வாழ்க்கையில் இப்படி எல்லாம் நடக்கும் என்று நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை.

அவமானம்: வாழ்க்கையில் இதை விட வேற என்ன பெரிய அவமானம் இருக்க முடியாது. ஆனால், அதை நான் அவமானமாக நினைக்கவில்லை. எனக்கு நடந்த அனைத்து அவமானங்களையும் நான் தூக்கிக்கொண்டு சுமக்கவில்லை. ஒகே அடுத்து என்ன என்று தாண்டி வந்து இருக்கிறேன். நான் இந்த இடத்திற்கு வர முக்கிய காரணம் என் தாய் தான்.

அவங்கதான் சூப்பர் ஸ்டார்: வீட்டிற்கு ஒரே பையன் என்பதால் என்னை செல்லமாக பார்த்து பார்த்து வளர்த்தார்கள். என் வளர்ச்சியைப் பார்த்து சந்தோஷம் படும் ஒரே நபர் என் அம்மாதான் எனவும் தெரிவித்திருந்தார். தனது அம்மாவின் சிறு உலகத்துக்குள் இருக்கும் அனைவரிடமும் தன்னை விட்டு கொடுக்காமல் பார்த்து கொண்டார்கள். மேலும், ஷாருக்கான் விஜய் போன்ற பல நட்சத்திரங்களை சினிமாவில் ஜொலிக்க வைத்ததை விட தனது தாயை சூப்பர் ஸ்டாராக ஆக்கியது தான் தனக்கு கிடைத்த மிகப்பெரிய பெருமையாக நான் பார்க்கிறேன் என்றார்.

பிரியா அட்லீ காதல்: தொடர்ந்து தனது காதல் மனைவி பிரியா குறித்து பேசிய அட்லி, முகப்புத்தகம் என்ற குறும்படத்தை இயக்கினேன் அதில் பிரியா நடித்திருந்தார். அப்போது, அவர் என்னை ப்ரதர் ப்ரதர் என்று தான் அழைத்தார். அதைத்தான் ராஜா ராணி படத்தில் வைத்தேன் என்று அட்லீ அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X