எனக்கு கிடைத்த தேவதை.. கடவுளின் தாராள மனசு.. மனைவிக்கு பிறந்த நாள் வாழ்த்து சொன்ன அட்லி!

சென்னை: மாஸ் இயக்குநர் என பெயர் எடுத்த அட்லீ தனது மனைவிக்கு க்யூட்டாக பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சங்கரிடம் உதவி இயக்குனராக இருந்த அட்லி, ஆர்யா, ஜெய், நயன்தாரா, நஸ்ரியாவை வைத்து ராஜா ராணி என்ற படத்தை இயக்கினார்.

Jawan Director Atlee wishes his wife on her birthday

இப்படத்தில் நயன்தாரா ஜெய்யின் காதலாகட்டும், நஸ்ரியா, ஆரியாவின் காதலாகட்டும் ரசிக்கும்படி இருக்கும். ராஜா ராணி சூப்பர் டூப்பர் ஹிட்டடித்து ரசிகர்களின் மனதில் ஒய்யாரமாக இடம் பிடித்தது.

இயக்குநர் அட்லி: முதல் படத்திலேயே வெற்றி இயக்குனர் என்ற முத்திரையை பெற்றார் அட்லி. தளபதி விஜய்யை வைத்து தெறி படத்தை இயக்கினார். தெறி படத்தில் போலீஸ் அதிகாரியாக பட்டையை கிளப்பி இருந்தார் விஜய். விஜய்யின் திரைப்படத்தில் மறக்க முடியாத திரைப்படமாக மாறியது தெறி.

பாலிவுட்டில் மாஸ்: இதைத் தொடர்ந்து மெர்சல், பிகில் என பிளாக் பஸ்டர் திரைப்படங்களை கொடுத்த அட்லி, பாலிவுட் ஸ்டார் ஷாருக்கானை வைத்து ஜவான் படத்தை இயக்கினார். இப்படத்தில் தீபிகா படுகோனே, நயன்தாரா, விஜய் சேதுபதி, யோகி பாபு ஆகியோர் நடித்திருத்தனர். பான் இந்திய திரைப்படமாக வெளியான படம் ஆயிரம் கோடிக்கு மேல் வசூலை அள்ளியது.

என் தேவதை: இந்நிலையில், இயக்குநர் அட்லீ தனது மனைவியை கட்டி அணைத்தபடி இருக்கும் போட்டோவை ஷேர் செய்து க்யூட்டாக வாழ்த்து தெரிவித்துள்ளார். இது உங்கள் பிறந்த நாள், நான் ஒரு பெண்ணுக்காக பிரார்த்தனை செய்தேன், ஆனால், கடவுள் மிகவும் தாராளமானவர், அவர் எனக்கு ஒரு தேவதையைக் கொடுத்தார். என் ஆசை ஏஞ்சல், நீ தான் என் எல்லாம் என தனது காதலை க்யூட்டாக வெளிப்படுத்தி உள்ளார்.

பிரியா அட்லி: அட்லீ இயக்கம் மட்டுமல்லாமல் தனது மனைவியுடன் இணைந்து 'A for Apple Productions' என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் தொடங்கி தயாரிப்பாளராக சங்கிலி புங்கிலி கதவ தொற, அந்தகாரம் ஆகிய திரைப்படங்களை தயாரித்துள்ளனர். சிங்கம், நான் மகான் அல்ல உல்ளிட்ட சில படங்களில் நடித்தவர் பிரியா அட்லீ. திருமணத்திற்கு பின் நடிப்பதை நிறுத்திக்கொண்டார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X