Jawan: அப்பா ஷாருக்கான் தான் கொல மாஸ்.. இடைவேளை காட்சியை ஷேர் செய்து தெறிக்கவிடும் ரசிகர்கள்!

சென்னை: ஜவான் படத்தின் வீடியோ காட்சிகள் இந்தியளவில் டிரெண்டாகி வருகின்றன. ஷாருக்கான் டீம் கோரிக்கை வைத்தாலும் ரசிகர்கள் ஜவான் படத்தின் காட்சிகளை ஷேர் செய்வதை நிறுத்துவதாக தெரியவில்லை.

தியேட்டரில் படத்தின் ஒவ்வொரு மாஸ் காட்சிக்கும் ரசிகர்கள் எழுந்து நின்று விசில் அடிப்பது, பாடல் காட்சிகளுக்கு தியேட்டரே அதிரும்படி ஆட்டம் போடுவது என முதல் நாள் காட்சியை கொண்டாடி வருகின்றனர்.

Jawan fans celebrates father Shah Rukh Khans Vikram Rathore character

பாலிவுட் ரசிகர்கள் இப்படியொரு மாஸ் ஷாருக்கான் படத்தை பார்த்து ரொம்ப நாள் ஆகிவிட்டது என்றும் குறிப்பாக விக்ரம் ரத்தோராக நடித்துள்ள அப்பா ஷாருக்கானின் அந்த இடைவேளை சண்டைக் காட்சி தான் படத்தின் மிகப்பெரிய கூஸ்பம்ப்ஸ் என அந்த சீன்களை ஷேர் செய்தே சோஷியல் மீடியாவை தெறிக்கவிட்டு வருகின்றனர்.

Jawan fans celebrates father Shah Rukh Khans Vikram Rathore character

மான்ஸ்டர் ஷாருக்கான்: உடம்பெல்லாம் துணி கட்டிக் கொண்டு மூன் நைட் ஹீரோ போல ஷாருக்கான் சண்டை போடும் காட்சிகளில் அவர் உடல் முழுக்க நெருப்பு பற்றிக் கொண்டு எதிரிகளை பந்தாடும் காட்சிகள் எல்லாம் உடம்பே புல்லரிக்குது என ஷாருக்கான் ரசிகர்கள் தியேட்டரில் செல்போனில் படம் பிடித்த வீடியோ காட்சிகளை பதிவிட்டு தங்கள் உற்சாகத்தை பதிவிட்டு வருகின்றனர்.

Jawan fans celebrates father Shah Rukh Khans Vikram Rathore character

பாக்ஸ் ஆபிஸ் திணற போகுது: இந்த ஆண்டின் மிகப்பெரிய இண்டஸ்ட்ரி ஹிட் படமாக இதுவரை ஷாருக்கானின் பதான் இருந்து வரும் நிலையில், அந்த படத்தையே ஜவான் ஓவர்டேக் செய்து புதிய உச்சத்தை தொடும் என்றும் பாலிவுட் திரையுலகுக்கும் ஷாருக்கான் கிடைத்தது பெரிய வரம் என்றும் அமீர்கான், சல்மான் கான், அஜய் தேவ்கன், அக்‌ஷய் குமார் உள்ளிட்டவர்கள் செய்ய முடியாத விஷயத்தை அசால்ட்டாக லெஃப்ட் ஹேண்டில் ஷாருக்கான் இந்த படத்தில் டீல் செய்துள்ளார் என கொண்டாடி வருகின்றனர்.

Jawan fans celebrates father Shah Rukh Khans Vikram Rathore character

அப்பா ஷாருக்கான் தான் ஹைலைட்: ஜவான் திரைப்படத்தில் விக்ரம் ரத்தோராக நடித்துள்ள அப்பா ஷாருக்கான் கேரக்டர் தான் படத்தின் ஹைலைட் என்றும் இடைவேளை காட்சியில் அதிரடி ட்விஸ்ட் உடன் அவர் கொடுக்கும் என்ட்ரி ஒன்றே போதும் இந்த படத்திற்கு வாங்கிய டிக்கெட்டின் விலையை அட்லீ ஈடு செய்து விட்டார் என சொல்லலாம் என பாலிவுட் ரசிகர்கள் முதல் படத்திலேயே அட்லீக்கு சிகப்பு கம்பளம் விரித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X