என்னது ‘ஜவான்‘ பேரரசு படத்தின் கதையா? கதை திருட்டு சர்ச்சையில் சிக்கினார் அட்லி!

சென்னை : அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்து வரும் ஜவான் படத்தின் கதை விஜயகாந்த் நடித்த பேரரசு படத்தின் கதை என தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் ஜவான் படத்தில் நயன்தாரா நாயகியாக நடித்து வருகிறார். மேலும், விஜய் சேதுபதி, பிரியாமணி, யோகி பாபு ஆகியோர் லீட் ரோலில் நடித்து வருகிறார்கள்.

இந்த படத்தில் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், ஜவான் படத்தின் முக்கியமான ஆக்‌ஷன் காட்சி படமாக்கப்பட்டு வருகின்றன.

இயக்குநர் அட்லீ

இயக்குநர் அட்லீ

தமிழில் ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான அட்லீ. இந்த படத்தை தொடர்ந்து விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் போன்ற படங்களை இயக்கினார். அதில் தெறியும், மெர்சலும் மெகா ஹிட்டாகின. இதில் பிகில் திரைப்படம் பல விமர்சனங்களை பெற்றாலும் வசூலை வாரிக்குவித்தது.

ஷாருக்கானின் ஜவான்

ஷாருக்கானின் ஜவான்

கோலிவுட்டில் மாஸ் ஹிட் திரைப்படங்களை கொடுத்த அட்லீ தற்போது பாலிவுட்டில் தனது பாதத்தை பதிக்க பக்காவாக பிளான் போட்டு ஜவான் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் ஷாருக்கான் தந்தை, மகன் என இரண்டு விதமான ரோலில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் டீசர் அண்மையில் வெளியானது, அதில் ஹாலிவுட் ரேன்ஜூக்கு முகத்தில் துணியை கட்டிக்கொண்டு ரசிகர்களை அலறவிட்டிருந்தார் ஷாருக்கான். இப்படம் அடுத்த ஆண்டு வெளியாக உள்ளது.

‘ஜவான்‘ பேரரசு படத்தின் கதையா?

‘ஜவான்‘ பேரரசு படத்தின் கதையா?

இந்நிலையில், தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் அட்லீ இயக்கி வரும் ஜவான் திரைப்படத்தின் கதை விஜய்காந்த் நடித்த பேரரசு திரைப்படத்தின் கதையை தழுவி இருப்பதாக கூறி தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகார் மீதான விசாரணை 9ந் தேதிக்கு மேல் நடத்த தயாரிப்பு சங்க நிர்வாகிகள் திட்டமிட்டுள்ளனர்.

படங்களின் உரிமைகள்

படங்களின் உரிமைகள்

2006ம்ஆ ஆண்டு விஜயகாந்த் நடித்து வெளியான பேரரசு திரைப்படத்தை ரோஜா காம்பைன்ஸ் என்ற நிறுவனம் தயாரித்திருந்தது. அந்த நிறுவனத்திற்கு மாணிக்கம் நாராயணன் பணம் கொடுத்திருந்தார். தற்போது ரோஜா காம்பைன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் காஜா மொய்தீன் உயிரிழந்துவிட்டதால், அவரின் படங்களின் உரிமைகள் அனைத்தும் தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணனிடம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X