Jawan Official Box Office: ஜெயிலரை விட ஜெட் வேகத்தில் செல்லும் ஜவான் வசூல்.. அதிகாரப்பூர்வ வசூல் இதோ
மும்பை: ஷாருக்கான் நடித்துள்ள ஜவான் திரைப்படத்தின் 4ம் நாள் வசூல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை ரெட் சில்லீஸ் நிறுவனம் தற்போது அறிவித்துள்ளது. ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படத்தின் இறுதியான அஃபிஷியல் ரிப்போர்ட்டை 4 நாட்களில் ஷாருக்கான் படம் நெருங்கி விட்டது குறிப்பிடத்தக்கது.
தொடர் தோல்வி காரணமாக கடந்த 4 ஆண்டுகள் எந்த ஒரு படத்தையும் வெளியிடாமல் சரியாக திட்டமிட்டு புதிய படங்களை தேர்வு செய்து நடித்த ஷாருக்கான் அடுத்தடுத்து ஜாக்பாட் வெற்றிகளை பெற்று வருகிறார்.

ரெட் சில்லீஸ் நிறுவனம் தயாரிப்பில் ஜவான் படம் வெளியான நிலையில், தொடர்ந்து வசூல் நிலவரங்களை அந்த நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு வருகிறது.
ஜெயிலரை நெருங்கிய ஜவான்: ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ வசூல் 525 கோடி ரூபாய் என கடைசியாக சன் பிக்சர்ஸ் அறிவித்து சக்சஸ் பார்ட்டி எல்லாம் கொண்டாடிய நிலையில், தற்போது வெறும் 4 நாட்களில் அந்த வசூலை ஷாருக்கானின் ஜவான் நெருங்கி விட்டதாக தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
ஞாயிற்றுக்கிழமை படத்துக்கு உலகம் முழுவதும் ஒட்டுமொத்த ஷாருக்கான் ரசிகர்களும் குவிந்த நிலையில், இமாலய வசூல் சாதனை சாத்தியம் ஆனதாக கூறுகின்றனர். 5 நாட்கள் கூட தேவையில்லை என்றும் 4 நாட்களிலேயே ஜவான் 500 கோடி கிளப்பில் இணைந்து விட்டதாகவும் இன்னமும் திரையிட்ட தியேட்டர்களில் எல்லாம் நான் ஸ்டாப்பாக படம் ஓடிக் கொண்டிருப்பதாக கூறுகின்றனர்.
தினமும் 100 கோடிக்கு மேல்: கடந்த செப்டம்பர் 7ம் தேதி வெளியான ஷாருக்கான், நயன்தாரா, விஜய்சேதுபதி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான ஜவான் திரைப்படம் ஏகப்பட்ட படங்களின் கலவை என விமர்சிக்கப்பட்டாலும் வசூலில் ஒரு இன்ச் கூட குறையாமல் அடித்து நொறுக்கி வருகிறது.

தினமும் 100 கோடிக்கும் அதிகமாக ஜவான் திரைப்படம் வசூல் ஈட்டி வரும் நிலையில், இதே வேகத்தில் இரண்டாவது வாரத்தையும் ஷாருக்கான் படம் தொட்டால் 1000 கோடிக்கு மேல் அசால்ட்டாக வசூலிக்கும் என்கின்றனர்.
அதிகாரப்பூர்வ வசூல்: ஜவான் திரைப்படம் கடந்த 4 நாட்களில் அதிகாரப்பூர்வமாக 520.79 கோடி ரூபாய் என சரியான புள்ளி விவரத்துடன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை தற்போது ரெட் சில்லீஸ் வெளியிட்டுள்ளது.
அடுத்து சக்சஸ் பார்ட்டி கொண்டாட்டங்கள் தான் என்றும் அனிருத் இன்னொரு கார் வாங்கப் போறாரா என்றும் ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











