Jawan: "வாவ்!! இதுதான் அந்த சர்ப்ரைஸ்ஸா..” ஜவான் இசை வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன்!!

சென்னை: ஷாருக்கான் நடித்துள்ள ஜவான் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள சாய்ராம் கல்லூரியில் நடைபெற்றது.

ஷாருக்கான், விஜய் சேதுபதி, அட்லீ, அனிருத் உள்ளிட்ட ஜவான் படக்குழுவினர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தனர்.

முன்னதாக ஜவான் இசை வெளியீட்டு விழாவுக்கு விஜய் சிறப்பு விருந்தினராக பங்கேற்பார் என சொல்லப்பட்டது.

ஆனால், அவர் கலந்துகொள்ளாத நிலையில், சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக உலகநாயகன் கமல்ஹாசன் கலந்துகொண்டார்.

 Jawan: Kamal Haasan made a surprise appearance at the Jawan audio launch

ஜவான் இசை வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன்: ஷாருக்கானின் ஜவான் திரைப்படம் செப்டம்பர் 7ம் தேதி வெளியாகவுள்ளது. பான் இந்தியா படமாக உருவாகியுள்ள ஜவான், நிச்சயம் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் சாதனை படைக்கும் என சினிமா விமர்சகர்கள் கூறி வருகின்றனர். அட்லீ இயக்கியுள்ள இந்தப் படத்தில், ஷாருக்கானுடன் விஜய் சேதுபதி, நயன்தாரா, தீபிகா படுகோன், ப்ரியாமணி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்நிலையில் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள சாய்ராம் கல்லூரியில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. ஷருக்கான், விஜய் சேதுபதி, அட்லீ, அனிருத், ப்ரியாமணி உட்பட ஏராளமான திரை பிரபலங்களும் ரசிகர்களும் கலந்துகொண்டனர். முன்னதாக ஜவான் இசை வெளியீட்டு விழாவில் விஜய் பங்கேற்கலாம் என செய்திகள் வெளியாகின.

ஆனால், அவரோ தளபதி 68 படத்திற்கான மேக்கப் டெஸ்ட் எடுப்பதற்காக அமெரிக்கா சென்றுவிட்டதாகத் தெரிகிறது. ஜவான் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெறுவதால், முன்னணி நட்சத்திரங்கள் யாரும் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. நிகழ்ச்சி ஆரம்பிக்கும் வரை அதற்கான அறிகுறிகள் ஏதும் தெரியாத நிலையில், திடீரென சர்ப்ரைஸ்ஸாக உலகநாயகன் கமல் ரசிகர்கள் முன் தோன்றினார்.

தற்போது அமெரிக்காவில் இருக்கும் கமல்ஹாசன், நேராக வர முடியவில்லை என்றாலும், வீடியோ காலில் லைவ்-ஆக வந்து பேசினார். ஜவான் படக்குழுவினர் அனைவருக்கும் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் கூறிய கமல், இந்தப் படம் கண்டிப்பாக வெற்றிப் பெறும் என்றார். மேலும், ஷாருக்கான் இந்திய அன்பின் அடையாளம் என பாராட்டினார். அதேபோல், பாலிவுட் வரை சென்று படம் இயக்கியுள்ள அட்லீயையும் கமல் பாராட்டினார்.

அட்லீயின் முதல் படமான 'ராஜா ராணி' பூஜை நிகழ்ச்சியில் கலந்துகொண்டதை குறிப்பிட்ட கமல், அவரது வளர்ச்சியை நினைத்து பெருமைகொள்வதாகக் கூறினார். மேலும், விஜய் சேதுபதி, அனிருத் ஆகியோர் பற்றியும் கமல்ஹாசன் நெகிழ்ச்சியாக பேசியது அங்கிருந்த ரசிகர்களுக்கு உற்சாகம் கொடுத்தது. ஜவான் இசை வெளியீட்டு விழாவில் கமல் பேசிய வீடியோவை அவரது ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X