என்ன நயன் இதெல்லாம்.. உன்னோட படம்னு நீ கூட அலர்ட் பண்ணல.. ஜவானை வறுத்தெடுக்கும் ரசிகர்கள்!

சென்னை: ஷாருக்கானின் ஜவான் திரைப்படத்திற்கு ஒரு பக்கம் பிரபலங்கள் பாராட்டு மழையை பொழிந்து வரும் நிலையில் மறுபக்கம் ரசிகர்கள் ஏகப்பட்ட மீம்களைப் போட்டு வறுத்தெடுத்து வருகின்றனர்.

இயக்குநர் அட்லீ ஜவான் திரைப்படத்தில் ஒரு படத்தின் கதையை எல்லாம் சுடவில்லையாம். ஒட்டுமொத்தமாக 23 படங்களின் கதையை சுட்டு இப்படி ஒரு பிரம்மாண்ட மோசடியை செய்துள்ளார் என ரசிகர்கள் கழுவி ஊற்றி வருகின்றனர்.

Jawan memes with Nayanthara Arambam connection makes you laugh definitely

அதிலும் விஷ்ணுவர்தன் இயக்கிய அஜித் மற்றும் நயன்தாரா நடித்த ஆரம்பம் படம் தான் ஹைலைட் என்கின்றனர். போன மாசம் வெளியான ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தை கூட அட்லீ விடவில்லை என்றும் இந்த படம் எல்லாம் பாக்ஸ் ஆபிஸில் எப்படித்தான் ஹிட் அடிக்கிறது என்றும் கேள்விகளை எழுப்பி உள்ளனர்.

236 கோடி வசூல்: பிகில் திரைப்படத்திற்கு பிறகு பாலிவுட்டுக்கு சென்ற இயக்குநர் அட்லீ என்னோட கிங் கானுக்கு நான் தான் செய்வேன் எனக் கடந்த மூன்று ஆண்டுகளாக காத்திருந்து பொறுமையாக செதுக்கிய ஜவான் திரைப்படம் ரிலீசான இரண்டே நாட்களில் 236 கோடி ரூபாயை வசூல் ஈட்டியுள்ளது.

விமர்சனங்களை கண்டுகல: படத்திற்கு இப்படி ஒரு வசூல் வரும் நிலையில் நெகட்டிவ் விமர்சனங்களையும் காப்பி ட்ரோல்களையும் ஷாருக்கான் தரப்பும் அட்லீ தரப்பும் கொஞ்சம் கூட கண்டுகொள்ளவே இல்லை என்கின்றனர்.

என்ன நயன் இதெல்லாம்: வடிவேலு மற்றும் கோவை சரளாவின் மீம் டெம்பிளேட்டை போட்டு, " என்ன நயன் இதெல்லாம்.. நாம ஆரம்பம் படத்தில் தான் நடிச்சிட்டு இருக்கோம்னு நீ கூட அலர்ட் பண்ணலையே" என அப்பாவி தனமாக ஷாருக்கான் கேட்பது போல உருவாக்கப்பட்ட மீம் ஒன்று ட்ரெண்டாகி வருகிறது.

Jawan memes with Nayanthara Arambam connection makes you laugh definitely

10 படம் இருக்கு: இது ஒரு படம் தான்.. ஆனால், இதுக்குள்ள 10 படத்தின் கதை இருக்கு என ஷாருக்கானின் ஜவான் படம் பல படங்களில் இருந்து காட்சிகளையும் கதைகளையும் சுட்டு எடுக்கப்பட்டு ஹிட் படமாக மாறியுள்ளது என்றும் எல்லாத்தையும் பொறுத்துக்கலாம் ஆனால், படத்தோட கிளைமேக்ஸ்ல மக்களுக்கு அட்வைஸ்னு பேர்ல காப்பியடிச்சுட்டு நீ கொடுக்குற அலப்பறைய மட்டும் தாங்க முடியல அட்லீ என நெட்டிசன்கள் விளாசி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X