Jawan - ஜவானுக்கு ஒரு இடத்தில் மட்டும் பலத்த அடியாம்?.. வெளியான புதிய தகவல்
சென்னை: Jawan (ஜவான்) ஜவான் இந்திய அளவில் பெரும் ஹிட்டாகியிருக்கும் சூழலில் ஒரு மாநிலத்தில் மட்டும் பலத்த அடி வாங்கியிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
இயக்குநர் அட்லீ தமிழில் ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் ஆகிய படங்களை இயக்கியிருக்கிறார். நான்கு படங்களை மட்டுமே இயக்கியிருந்தாலும் அட்லீ குறுகிய காலத்திலேயே முன்னணி இயக்குநர் என்ற பெயரை பெற்றுவிட்டார். ஏனெனில் அவர் இயக்கிய 4 படங்களில் பிகில் படம் மட்டும்தான் தோல்வியை சந்தித்தது. மற்ற படங்கள் நல்ல வரவேற்பையே பெற்றன.

ஜவான்: தமிழில் வலம் வந்த அட்லீ அடுத்ததாக ஜவான் படத்தை இயக்கியிருக்கிறார். ஹிந்தியில் எண்ட்ரி கொடுத்திருக்கும் முதல் படத்திலேயே ஷாருக்கான் ஹீரோவாக நடித்திருக்கிறார். படம் கடந்த 7ஆம் தேதி வெளியானது. முதல் நாள் முதல் காட்சியில் பாசிட்டிவ் விமர்சனங்களே வந்தன. எனவே தமிழை போல் ஹிந்தியிலும் அவர் தடம் பதித்துவிட்டார். இன்னும் சில வருடங்களுக்கு பாலிவுட்டில் அட்லீ பிஸியாக இருக்கலாம் என கருதப்படுகிறது. அடுத்ததாக வருண் தவானை வைத்து தெறி படத்தின் ஹிந்தி ரீமேக்கை அவர் தயாரிப்பதாக கூறப்படுகிறது.
விமர்சனம்: அட்லீயின் இயக்கத்திற்கென்று ரசிகர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அதேசமயம் அவர் மற்ற படங்களை காப்பி அடிக்கிறார் என்ற விமர்சனமும் எழுவது உண்டு. அதாவது ராஜா ராணி படம் மௌனராகம் என்றும், தெறி சத்ரியன் என்றும் கூறப்படுவதுண்டு. ஆனால் அட்லீ அதற்கெல்லாம் கவலைப்படவில்லை. 7 ஸ்வரங்களுக்குள்தான் ட்யூன் போட முடியும் என இந்த விவகாரத்துக்கு ஒரே ஒருமுறை விளக்கம் அளித்திருந்தார்.
மேக்கிங்கில் அதகளம்: படத்தை காப்பி அடிக்கிறார் என்ற விமர்சனம் எழுந்தாலும் அட்லீயின் மேக்கிங் வேறு தரத்தில் இருக்கும் என்று ரசிகர்கள் கூறுவதுண்டு. குறிப்பாக தனது முதல் படமான ராஜா ராணி படத்தில் அட்லீ மேக்கிங் அவ்வளவு ரிச்சாக இருக்கும். அதைப் பார்த்த பலரும் முதல் படத்திலேயே இப்படிப்பட்ட மேக்கிங்கை கொடுத்து ரசிகர்களை கட்டிப்போட்டுவிட்டார். ஷங்கரின் உதவி இயகுநர் என்பதை நிரூபித்துவிட்டார் என புகழ்ந்தனர். அதேபோல்தான் ஜவான் படத்திலும் அவரது மேக்கிங் இருந்ததாக ரசிகர்களில் ஒருதரப்பினர் கூறினர்.
வசூல்: ஜவான் படம் காப்பி அடிக்கப்பட்டது என்று விமர்சனங்கள் எழுந்தாலும் வசூல் ரீதியாக படத்துக்கு செம ரெஸ்பான்ஸ் இருக்கிறது. அதன்படி இதுவரை 900 கோடி ரூபாயை வசூலில் கடந்துவிட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஜவான் படம் ஒரே ஒரு இடத்தில் நஷ்டம் அடைந்திருப்பதாக கூறப்படுகிறது. அதாவது கேரள மாநிலத்தில் ஜவான் படத்தை விநியோகித்த நிறுவனத்தை கிட்டத்தட்ட 30லிருந்து 35 சதவீதம்வரை நஷ்டம் ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.


Click it and Unblock the Notifications











