Jawan - ஷாருக்கானுடன் நடனம் ஆடும் அட்லீ.. வெளியானது ஜவான் பாடல் மேக்கிங் வீடியோ

சென்னை: Jawan (ஜவான்) ஜவான் படத்தில் இடம்பெற்ற வந்த இடம் பாடலின் மேக்கிங் வீடியோ வெளியாகி வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

ஆர்யாவை வைத்து ராஜா ராணி, விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் ஆகிய படங்களை இயக்கிய அட்லீ இப்போது ஹிந்தியில் ஷாருக்கானை வைத்து ஜவான் படத்தை இயக்கியிருக்கிறார். இதில் நயன்தாரா, விஜய் சேதுபதி, யோகிபாபு, ப்ரியாமணி, தீபிகா படுகோனே உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். 2021ஆம் ஆண்டே படத்தின் ஷூட்டிங் தொடங்கப்பட்டாலும் சில காரணங்களால் படப்பிடிப்பு முடிவதில் தாமதம் ஏற்பட்டது.

 Jawan Movie Vandha Idam Song Making Video is Out Now

செப்டம்பர் 7ஆம் தேதி ரிலீஸ்: ஒருவழியாக படத்தின் ஷூட்டிங் முடிந்து செப்டம்பர் 7ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. படத்தை ஷாருக்கானின் மனைவி கௌரி கான் தயாரித்திருக்கிறார். முதலில் ஜூன் இரண்டாம் தேதி படம் ரிலீஸாவதாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இப்படிப்பட்ட சூழலில் படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியானது.

ட்ரெயலர் சாதனை: படம் முழுக்க முழுக்க ஆக்‌ஷன் பேக்கேஜாக உருவாகியிருப்பதை ட்ரெய்லர் உறுதி செய்கிறது. அதேபோல் ஷாருக்கான் இந்தப் படத்தில் நெகட்டிவ் ஷேடில் தோன்றுவாரோ என்ற சந்தேகமும் ரசிகர்களிடம் ட்ரெய்லரை பார்த்த பிறகு உருவாகியிருக்கிறது. இந்திய சினிமா வரலாற்றிலேயே முதன்முறையாக ட்ரெய்லர் வெளியான 24 மணி நேரத்தில் 100 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனையும் படைத்தது.

விஜய் சேதுபதி லுக்: படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார். நேற்று அவரது லுக் வெளியிடப்பட்டது. வயதான கெட்டப்பில் விஜய் சேதுபதி இருக்கிறார். அவரது கெட்டப் ஒருபக்கம் வரவேற்பைப் பெற்றாலும் இது விக்ரம் வேதா விஜய் சேதுபதியை நியாபகப்படுத்துகிறதே என்ற குரல்களும் ஆங்காங்கே கேட்க ஆரம்பித்திருக்கின்றன.

ஃபர்ஸ்ட் சிங்கிள்: இதற்கிடையே வந்த இடம் என்ற முதல் சிங்கிளும் ரிலீஸானது. பிரமாண்டமாக போடப்பட்டில் செட்டில் பல நூறு டான்ஸர்களுடன் ஷாருக்கான் அட்டகாசமாக நடனம் ஆடியிருய்ந்தார். ட்ரெய்லரைப் போலவே பாடலும் வெளியான 24 மணி நேரத்தில் பல மில்லியன் பார்வைகளை கடந்து சாதனைப் படைத்த்தது. பாடலுக்கு இசையமைத்த அனிருத்துக்கும் பலர் தங்களது வாழ்த்தையும் பாராட்டையும் தெரிவித்தனர்.

மேக்கிங் வீடியோ: இந்நிலையில் வந்த இடம் பாடலின் மேக்கிங் வீடியோ இன்று வெளியாகியிருக்கிறது. அதில் ஷாருக்கானுக்கு ஷோபி மாஸ்டர் நடனம் அமைக்கும் காட்சிகளும், ஷாருக்குடன் அட்லீயும் இணைந்து நடனம் ஆடும் காட்சிகளும் இடம்பெற்றிருக்கின்றன. பாடலானது சென்னையில் செட் போடப்பட்டு எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த வீடியோவை ரசிகர்கள் அதிகம் பகிர்ந்துவருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X