Jawan: ஜவான் ஒரிஜினல் தமிழ் வெர்ஷன் இந்தப் படமா..? அட்லீயின் அட்ராசிட்டி... வெளுக்கும் நெட்டிசன்கள்

சென்னை: ராஜா ராணி திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமான அட்லீ, இப்போது பாலிவுட்டிலும் என்ட்ரி கொடுத்துள்ளார். விஜய்யின் தெறி, மெர்சல், பிகில் படங்களைத் தொடர்ந்து, ஷாருக்கானுடன் கூட்டணி வைத்த அட்லீ, ஜவான் படத்தை இயக்கியுள்ளார்.

இந்நிலையில், இந்தி, தமிழ், தெலுங்கு என மூன்று மொழிகளில் வெளியான ஜவான், பாசிட்டிவான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. இதனிடையே வழக்கம் போல ஜவான் படத்தின் கதையை அட்லீ எங்கிருந்து காப்பி பேஸ்ட் செய்துள்ளார் என நெட்டிசன்கள் கண்டுபிடித்து ட்ரோல் செய்து வருகின்றனர்.

 Jawan: Netizens Trolled Shah Rukh Khans Jawan copycat Sathyaraj Thaai Naadu film

ஜவான் ஒரிஜினல் தமிழ் வெர்ஷன்: இயக்குநர் ஷங்கரின் அசிஸ்டெண்ட்டாக இருந்து டைரக்டராக அறிமுகமானவர் அட்லீ. ராஜா ராணி திரைப்படம் மூலம் இயக்குநரான அட்லீ, தொடர்ந்து தெறி, மெர்சல், பிகில் ஆகிய படங்களையும் இயக்கினார். விஜய் - அட்லீ கூட்டணியில் வெளியான இந்த மூன்று படங்களுமே சூப்பர் ஹிட் அடித்தன. அதேநேரம், ராஜா ராணி முதல் பிகில் வரை அட்லீ இயக்கிய படங்கள் கதை திருட்டு சர்ச்சையில் சிக்கியது.

இந்நிலையில், முதன்முறையாக இந்திக்கு சென்றுள்ள அட்லீ, பாலிவுட் பாட்ஷா ஷாருக்கான் நடித்துள்ள ஜவான் படத்தை இயக்கியுள்ளார். ஷாருக்கான் - அட்லீ கூட்டணியில் வெளியான ஜவான், ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. ஆக்‌ஷன் ப்ளஸ் பக்கா கமர்சியல் படமாக உருவாகியுள்ள ஜவானுக்கு பாசிட்டிவான விமர்சனங்களே கிடைத்துள்ளன. அதேபோல், பாக்ஸ் ஆபிஸிலும் முதல் நாளில் மட்டும் 85 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாம்.

இதனிடையே ஜவான் படத்தின் கதையும் தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளது. அப்பா, மகன் என இரண்டு வேடங்களில் நடித்துள்ள ஷாருக்கான், மக்களுக்காக ஆக்‌ஷன் அவதாரம் எடுப்பது தான் ஜவான் படத்தின் ஒன்லைன். ஜெயிலராக இருக்கும் மகன் ஷாருக்கான், சமூக விரோதிகளை வேட்டையாடுகிறார். அவருக்கு அப்பா ஷாருக்கான் எப்படி உதவுகிறார் என்பது தான் மொத்த கதையும். மேக்கிங்கில் மிரட்டியுள்ள அட்லீ, கதையை அப்படியே காப்பி பேஸ்ட் செய்துள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது.

 Jawan: Netizens Trolled Shah Rukh Khans Jawan copycat Sathyaraj Thaai Naadu film

அதாவது சத்யராஜ் நடிப்பில் 1989ம் ஆண்டு வெளியான திரைப்படம் தாய்நாடு. சத்யராஜ் இரட்டை வேடங்களில் நடித்த இந்தப் படத்தின் கதையும், அட்லீ இயக்கியுள்ள ஜவான் கதையும் ஒன்று தான் என நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். கதை, திரைக்கதை என அப்படியே தாய் நாடு படத்தை அட்லீ காப்பி பேஸ்ட் செய்துவிட்டதாக கலாய்த்து வருகின்றனர். ஏற்கனவே ஜவான் பிளாஷ்பேக் காட்சிகள், விஜயகாந்தின் ரமணா படத்தில் இருந்து சுடப்பட்டுள்ளது என விமர்சனம் எழுந்தது.

 Jawan: Netizens Trolled Shah Rukh Khans Jawan copycat Sathyaraj Thaai Naadu film

இந்நிலையில் தற்போது சத்யராஜ்ஜின் தாய்நாடு திரைப்படம் தான், ஜவானின் ஒரிஜினல் தமிழ் வெர்ஷன் என ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது. அதேபோல், அட்லீ இதுவரை பண்ண எல்லா படங்களில் இருந்தும் ஒரு பத்து நிமிட காட்சிகளை எடுத்து, ஸ்லோமோஷன், சிஜி, பளாஷ்பேக் என ஜவான் படத்தை இயக்கியுள்ளார் அட்லீ என நெட்டிசன்கள் விமர்சித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X