Jawan: அடேங்கப்பா.. அப்பா ஷாருக்கானுடன் மகன் ஷாருக்கான் என்னவொரு ஆட்டம்.. வெளியானது பாடல் வீடியோ!

சென்னை: அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் டபுள் ஆக்‌ஷனில் நடித்துள்ள ஜவான் திரைப்படத்தின் நாட் ராமைய்யா வஸ்தாவைய்யா பாடல் வீடியோ தற்போது வெளியாகி டிரெண்டாகி வருகிறது.

அனிருத் இசையில் உருவாகி உள்ள இந்த பாடலை அனிருத்தே பாடியுள்ளார். அப்பா விக்ரம் ரத்தோராகவும் மகன் ஆஸாத்தாகவும் நடிகர் ஷாருக்கான் அசத்தல் டான்ஸ் போட்டு ரசிகர்களை தியேட்டர்களில் எப்படி தெறிக்கவிட்டார்களோ தற்போது டிஜிட்டலில் பாடலை வெளியிட்டு ஒட்டுமொத்த ரசிகர்களையும் ரிப்பீட் மோடில் பார்க்க வைத்து வருகின்றனர்.

Jawan Not Ramaiya Vastavaiya video song out now

நயன்தாரா மற்றும் ஷாருக்கானின் டீமில் இருக்கும் சிங்கப் பெண்கள் எல்லாமே சேர்ந்து இந்த பாடலுக்கு ஆட்டம் போட்டுள்ளனர்.

கோலிவுட் டு பாலிவுட்: ராஜா ராணி, தெறி, மெர்சல் மற்றும் பிகில் உள்ளிட்ட படங்களுக்கு அனிருத்தை பயன்படுத்தாமல் இருந்து வந்த அட்லீ பாலிவுட்டில் ஷாருக்கான் படத்துக்கு அலேக்காக அட்லீயை அழைத்துச் சென்று மிகப்பெரிய சம்பவத்தை செய்துள்ளார். ஷாருக்கானுக்கு பிஜிஎம் முதல் பாடல்கள் வரை மரண மாஸாக போட்டு பாலிவுட் ரசிகர்கள் மத்தியிலும் ராக்ஸ்டாராக மாறியுள்ளார் அனிருத்.

ஜவான் பாடல் வீடியோ ரிலீஸ்: ஜவான் திரைப்படம் மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்தி வரும் நிலையில், படக்குழுவினர் அடுத்ததாக கொண்டாட்ட மோடுக்கு மாறிவிட்டனர். நேற்று நடந்த சக்சஸ் மீட் நிகழ்ச்சியில் நடிகை தீபிகா படுகோன் ஷாருக்கானுக்கு முத்தம் கொடுத்த நிலையில், தற்போது ஜவான் படத்தின் நாட் ராமைய்யா வஸ்தாவைய்யா பாடல் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

அனிருத் இசையமைத்து பாடிய இந்த பாடல் ரசிகர்களை தியேட்டரில் ஆட்டம் போட வைத்த நிலையில், தற்போது ஒவ்வொரு வீடுகளிலும் ஆட்டம் போட வைக்கப் போகிறது.

டபுள் ஷாருக்கான்: விக்ரம் ரத்தோர் மற்றும் ஆசாத் என டபுள் ரோலில் ஷாருக்கான் ஜவான் படத்தில் நடித்த நிலையில், அப்பா மகன் இணைந்து கிளைமேக்ஸில் படம் முடிந்து ஆட்டம் போடும் பாடலாக இந்த பாடல் உருவாகி உள்ளது. ஷாருக்கான் வயதான கெட்டப்பிலும், இளமையான கெட்டப்பிலும் செம எனர்ஜியுடன் டான்ஸ் போட்டிருப்பதை பார்த்த ரசிகர்கள் குஷியாகி உள்ளனர்.

நயன்தாரா நச்சுன்னு இருக்காரு: முதல் பாலிவுட் படம் என்றாலும், படத்தில் எப்படி மிரட்டியிருந்தாரோ லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா அதே அளவுக்கு இந்த பாடலிலும் செம போல்டான உடைகளை அணிந்து கொண்டு ஷாருக்கானுடன் செம நெருக்கமாக ஆட்டம் போட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X