Jawan: இது அதுல்ல.. விஜய்சேதுபதிக்கு ஹக்.. அனிருத்துக்கு கிஸ்.. சூப்பர்ஸ்டாராவே மாறிய ஷாருக்கான்!

சென்னை: ஷாருக்கானின் ஜவான் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி சென்னையில் உள்ள சாய்ராம் கல்லூரியில் அறிவித்தபடி 3 மணி முதல் ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது. பாவனா மற்றும் ஆர்ஜே விஜய் தொகுப்பாளர்களாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் நிலையில், இயக்குநர் அட்லீ, நடிகர்கள் ஷாருக்கான், விஜய்சேதுபதி மற்றும் இசையமைப்பாளர் அனிருத் உள்ளிட்ட படக்குழுவினர் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர்.

அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்த பிகில் படம் 2019ல் வெளியான நிலையில், கடந்த 4 ஆண்டுகளாக ஷாருக்கானின் ஜவான் படத்திற்காகவே தன்னை முழுவதுமாக அர்பணித்த அட்லீ தனது மனைவி பிரியா அட்லீயுடன் மெர்சலாக நிகழ்ச்சி வந்த காட்சிகள் இணையத்தில் டிரெண்டாகி வருகின்றன.

Jawan Pre Release Event: Shah Rukh Khan hugs Vijay Sethupathi and Kisses Anirudh

நடிகர் ஷாருக்கான், விஜய்சேதுபதி அருகே அனிருத் அமர்ந்திருக்கும் வீடியோ காட்சிகளையும் ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் ஷேர் செய்து வருகின்றனர்.

விஜய்சேதுபதியை கட்டிப்பிடித்த ஷாருக்கான்: பேட்ட படத்தில் ரஜினிக்கு வில்லனாகவும் மாஸ்டர் படத்தில் விஜய்க்கு வில்லனாகவும், விக்ரம் படத்தில் கமலுக்கு வில்லனாகவும் நடித்து தமிழ் சினிமாவையே மிரட்டிய விஜய்சேதுபதி ஃபர்ஸி வெப்சீரிஸ் மூலம் பாலிவுட் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நிலையில், தற்போது ஜவான் படத்தில் ஷாருக்கானுக்கு வில்லனாக நடித்து மிரட்டி உள்ளார்.

சென்னையில் நடைபெற்ற ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சிக்கு வருகை தந்த ஷாருக்கான் விஜய்சேதுபதி மற்றும் அனிருத்தை பார்த்து ரொம்பவே ஹேப்பியாகி விட்டார். மக்கள் செல்வனை அப்படியே கட்டிப்பிடித்த காட்சிகள் தீயாக பரவி வருகின்றன.

Jawan Pre Release Event: Shah Rukh Khan hugs Vijay Sethupathi and Kisses Anirudh

அனிருத்துக்கு முத்தம்: விஜய்சேதுபதியை ஹக் செய்து தனது சந்தோஷத்தை பகிர்ந்த ஷாருக்கான் ஜவான் படத்தின் பாடல்கள் உலகம் முழுவதும் ஹிட் அடித்து வரும் நிலையில், அனிருத்தை அள்ளி அணைத்து முத்தம் கொடுத்து தனது ஆனந்தத்தை வெளிப்படுத்தி உள்ளார்.

Jawan Pre Release Event: Shah Rukh Khan hugs Vijay Sethupathi and Kisses Anirudh

சூப்பர்ஸ்டாராவே மாறிட்டார்: சமீபத்தில் நடைபெற்ற ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் வந்த உடனே நெல்சனையும் அனிருத்தையும் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்ததை போலவே ஷாருக்கான் செய்ததை பார்த்த ரசிகர்கள் சூப்பர்ஸ்டாராவே மாறிட்டார் ஷாருக்கான் என கம்பேரிசன் மீம் போட்டு டிரெண்ட் செய்து வருகின்றனர்.

Jawan Pre Release Event: Shah Rukh Khan hugs Vijay Sethupathi and Kisses Anirudh

நோ நயன்தாரா: தமிழ் படங்களுக்கு மட்டுமின்றி பாலிவுட் படமாக இருந்தாலும் நடிகை நயன்தாரா புரமோஷனுக்கு வரமாட்டேன் என்பதில் உறுதியாக உள்ளார் போலத்தெரிகிறது. அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துள்ள ஜவான் படத்தின் ஹீரோயின் நயன்தாரா இந்த புரமோஷனுக்கு வரவில்லை என்றே தெரிகிறது. சொந்த கம்பெனி பட புரமோஷனுக்கு மட்டுமே நயன்தாரா வருவார் போல என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். நடிகை பிரியாமணி இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X