Jawan Box Office: முதல் நாள் அட்வான்ஸ் புக்கிங் மட்டும் இத்தனை கோடியா.. ஜாக்பாட்டுக்கு ரெடியான ஜவான்

சென்னை: நடிகர் ஷாருக்கானின் ஜவான் திரைப்படத்தின் முதல் நாள் அட்வான்ஸ் புக்கிங் மட்டுமே இதுவரை 21 கோடி ரூபாய் கடந்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஷங்கரின் உதவி இயக்குனரான அட்லீ நயன்தாரா, ஆர்யா, ஜெய், நஸ்ரியா நடித்த ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார். அந்த படம் வெற்றியடைந்த நிலையில், அடுத்ததாக தளபதி விஜய்யை வைத்து தெறி படத்தை எடுத்து மிகப்பெரிய பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்றார்.

Jawan Pre Ticket Booking sales crosses 21 crores and tickets sales on fire mode

ஜவான் ஜாக்பாட்: தெறி படத்தை தொடர்ந்து மெர்சல் மற்றும் பிகில் என ஹாட்ரிக் அடுத்த அட்லீ அடுத்ததாக கோலிவுட்டில் இருந்து பாலிவுட்டுக்கு சென்று ஜவான் படத்தை இயக்கியுள்ளார். வரும் செப்டம்பர் 7ம் தேதி ஜவான் திரைப்படம் உலகம் முழுவதும் ரிலீசாக உள்ள நிலையில் அந்தப் படத்தின் ஃப்ரீ புக்கிங் அசுர வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது.

இதுவரை 21 கோடி ரூபாய் உலக அளவில் ஜவான் படத்திற்கான ஃப்ரீ புக்கிங் நடைபெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் நாளை ஒருநாள் உள்ள நிலையில் அதிகபட்சமாக காட்சிக்கான அட்வான்ஸ் புக்கிங் 40 கோடி ரூபாயை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Jawan Pre Ticket Booking sales crosses 21 crores and tickets sales on fire mode

அனல் பறக்கும் அட்வான்ஸ் புக்கிங்: இந்த ஆண்டு சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான் நடித்த பதான் திரைப்படத்தின் முதல் நாள் அட்வான்ஸ் புக்கிங் 32 கோடி ரூபாயாக இருந்த நிலையில் முதல் நாள் வசூல் அதிகபட்சமாக இந்திய அளவில் 57 கோடி ரூபாயை ஈட்டியிருந்தது.

அதைவிட தற்போது ஜவான் திரைப்படம் முதல் நாளில் 60 கோடி ரூபாய் வரை இந்தியாவில் மட்டும் வசூல் ஈட்டும் என கணிப்புகள் வெளியாகி உள்ளன. இதுவரை சுமார் 7.5 லட்சம் டிக்கெட்டுகள் விற்கப்பட்டுள்ளதாகவும் உலக அளவில் முதல் நாள் ஜவான் திரைப்படம் 100 கோடி ரூபாய் வசூலை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜவான் திரைப்படம் பதான் திரைப்படத்தை போலவே பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது என்பது அந்த படத்தின் டிரைலரை பார்த்தாலே தெரிகிறது. இந்நிலையில் முதல் வாரத்திலேயே 500 கோடி ரூபாய் வசூலை திரைப்படம் தாண்டும் என்றும் பாக்ஸ் ஆபிஸ் டிராக்கர்கள் கணித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X