Jawan: கடைசி நேரத்தில் வேலையை காட்டிய அட்லீ... ஜவான் ரிலீஸில் சிக்கல்... டென்ஷனான ஷாருக்கான்

மும்பை: ஷாருக்கான் தற்போது அட்லீ இயக்கத்தில் ஜவான் படத்தில் நடித்து வருகிறார்.

முன்னதாக அவர் நடிப்பில் வெளியான பதான், பாக்ஸ் ஆபிஸில் ஆயிரம் கோடிக்கும் மேல் வசூலித்தது.

ஜவான் திரைப்படம் ஜூன் மாதம் வெளியாகும் என படக்குழு தரப்பில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், ஜவான் டீசர் ரிலீஸ் குறித்து எக்ஸ்க்ளூசிவான அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது.

 Jawan release postponed: Shah Rukh Khans Jawan release date has been postponed

ஜவான் ரிலீஸ் தேதி : பழைய படங்களை பட்டி டிங்கரிங் பார்த்து கோலிவுட்டில் ஹிட் கொடுத்துக் கொண்டிருந்த அட்லீ, தற்போது பாலிவுட் பக்கம் சென்றுள்ளார். பாலிவுட் பாட்ஷா ஷாருக்கான் நடிப்பில் ஜவான் படத்தை இயக்கி வருகிறார். ஷாருக்கானுடன் விஜய் சேதுபதி, நயன், ப்ரியாமணி, யோகி பாபு உள்ளிட்ட பலரும் இந்தப் படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

ஷாருக்கானின் பதான் திரைப்படம் மெஹா ஹிட் அடித்ததால் ஜவான் மீதான எதிர்பார்ப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஜவான் படத்திற்காக தான் போட்டுள்ள பிஜிஎம் ல் அனிருத் இசையமைத்து வருகிறார். ஜவான் படத்தில் தனது பிஜிஎம் இசை வேற லெவலில் இருக்கும் என அனிருத் கூறியிருந்தார். இந்நிலையில், ஜவான் ஜூன் 2ம் தேதி ரிலீஸ் என படக்குழு ஏற்கனவே அறிவித்துவிட்டது.

ஆனால், ஜவான் ரிலீஸ் தேதிக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், தற்போது அதில் மாற்றம் இருப்பதாக சொல்லப்படுகிறது. ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் போதை பொருள் வழக்கில் கைதானபோது ஜவான் படப்பிடிப்பு சில மாதங்கள் தள்ளிப்போனது. அதேபோல், பதான் படத்தின் ப்ரொமோஷனில் ஷாருக்கான் பிஸியானதால், அப்போதும் ஜவான் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது.

 Jawan release postponed: Shah Rukh Khans Jawan release date has been postponed

இதனால், கடைசிக் கட்டத்தில் ஜவான் படப்பிடிப்பை வேகமாக நடத்தினார் அட்லீ. ஆனாலும் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் இன்னும் முடியவில்லையாம். கிராபிக்ஸ், பேட்ச் ஒர்க் என அடுத்தடுத்து வேலைகள் இருப்பதால் ஜவான் ரிலீஸ் தேதி தள்ளிப்போவதாக சொல்லப்படுகிறது. ஜூன் 2ம் தேதிக்குப் பதிலாக இன்னொரு தேதியை ஷாருக்கான் முடிவு செய்வார் எனவும் தெரிகிறது.

இதனிடையே, ஜவான் டீசரின் ரன்னிங் டைம் உள்ளிட்ட சில தகவல்களும் இணையத்தில் லீக்காகி இருந்தன. இந்த டீசர் 1.54 ரன்னிங் டைம் உடன் வெளியாகும் எனவும், சென்சாரில் U/A சர்டிஃபிகேட்டும் வழங்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனாலும் இன்னும் ஜவான் டீசர் ரிலீஸ் தேதி பற்றி எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஜவான் ரிலீஸாக வேண்டிய கடைசி நேரத்தில் அட்லீ வேலையை காட்டிவிட்டாரே என ஷாருக்கான் செம்ம கடுப்பில் உள்ளாராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X