நயன்தாராவுடன் திருப்பதியில் ஷாருக்கான்.. தங்கக் கொடிமரத்தை பார்த்து என்ன பண்ணாரு தெரியுமா?
சென்னை: ஜவான் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்த நிலையில் நடிகை நயன்தாரா வராத நிலையில் தற்போது பாலிவுட் நடிகர் ஷாருக்கான் உடன் திருப்பதிக்கு சாமி தரிசனம் செய்ய சென்றிருப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
மேலும் பட்டு வேட்டி பட்டு சட்டை அணிந்து கொண்டு நடிகர் ஷாருக்கான் தனது மகள் சுஹானா கான் மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் திருப்பதிக்கு சென்ற நிலையில் அங்கே உள்ள கொடிமரத்தை தொட்டு வணங்கி சாமி கும்பிட்ட வீடியோ ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

இயக்குனர் அட்லி இயக்கத்தில் வரும் செப்டம்பர் ஏழாம் தேதி ஜவான் திரைப்படம் வெளியாக உள்ள நிலையில் அந்த படம் உலகம் முழுவதும் மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்த வேண்டும் என திருப்பதி ஏழுமலையானிடம் ஜவான் படக் குழுவினர் வேண்டுதல் வைத்துள்ளனர்.
திருப்பதியில் ஷாருக்கானுடன் நயன்தாரா: இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் நடிகை நயன்தாராவுக்கும் திருப்பதி ஃபேவரிட் ஆன ஸ்பாட் என்பதால் நடிகர் ஷாருக்கானையும் தற்போது திருப்பதிக்கு இருவரும் அழைத்து சென்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜவான் படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிக்கே நடிகை நயன்தாரா சர்ச்சை கிளம்பிய நிலையில் தற்போது இப்போதைக்கு நடிகர் ஷாருக்கானுடன் நயன்தாரா சென்றிருப்பது திரையுலகத்தை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
கொடி மரத்தின் அருகே ஷாருக்கான் செய்த செயல்: அட்லி இயக்கத்தில் உருவாகியுள்ள ஜவான் திரைப்படத்தின் மூலம் நயன்தாரா முதன்முதலாக பாலிவுட்டில் அறிமுகம் ஆகிறார். இந்த ஆண்டு ஷாருக்கான் நடிப்பில் வெளியான பதான் திரைப்படம் ஆயிரம் கோடி வசூல் வேட்டையை நடத்திய நிலையில் அந்தப் படத்தின் வசூல் சாதனையை ஜவான் திரைப்படம் முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாலிவுட்டில் அதிகப்படியாக அமீர்கான் நடித்த தங்கல் திரைப்படம் 2000 கோடி ரூபாய் வசூலை பெற்று இந்திய சினிமாவிலேயே பாக்ஸ் ஆபிஸில் முதல் இடத்தில் உள்ளது. அந்தப் படத்தை தொடர்ந்து ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ் நடித்த பாகுபலி 2 திரைப்படம் இரண்டாம் இடத்தில் உள்ளது.
இந்த இரு படங்களின் வசூலையும் ஷாருக்கானின் ஜவான் திரைப்படம் முறியடிக்குமா என்கிற எதிர்பார்ப்பு எகிறி உள்ள நிலையில் தற்போது திருப்பதிக்கு சென்றுள்ள நடிகர் ஹாருக்கான் அங்குள்ள தங்க கொடிமரத்தை சிரத்தையுடன் தொட்டு வணங்கி கொடிமரத்தின் உச்சியையும் உற்று பார்த்து உருக்கமாக வேண்டிய காட்சிகள் சமூக வலைத்தளங்களில் தீயாக பரவி வருகின்றன.


Click it and Unblock the Notifications











