Jawan: “போடு தகிட தகிட..” அனிருத்துடன் கவுண்டமணி ஸ்டெப் போட்ட ஷாருக்கான்... ஜவான் வைப் காலி!
சென்னை: பாலிவுட் ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் ஜவான்.
அட்லீ இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.
அனிருத்தின் இசை நிகழ்ச்சியுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சியை ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர்.
இந்நிலையில், ஜவான் இசை வெளியீட்டு விழாவில் அனிருத்துடன் இணைந்து ஷாருக்கான் ஆட்டம் போட்ட வீடியோ வைரலாகி வருகிறது.

கவுண்டமணி ஸ்டெப் போட்ட ஷாருக்கான்: ஷாருக்கான் நடித்துள்ள ஜவான் திரைப்படம் செப்டம்பர் 7ம் தேதி வெளியாகவுள்ளது. அட்லீ இயக்கியுள்ள இந்தப் படம் இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளிலும் ரிலீஸாகவிருப்பதால் பான் இந்தியா ரசிகர்களும் அதிக எதிர்பார்ப்பில் உள்ளனர். முன்னதாக ஷாருக்கானின் பதான் திரைப்படம் கடந்த ஜனவரியில் வெளியாகி ஆயிரம் கோடிக்கும் மேல் வசூலித்தது குறிப்பிடத்தக்கது.
ஜவான் வெளியாக இன்னும் ஒரு வாரம் மட்டுமே இருப்பதால், அடுத்தடுத்து அப்டேட்கள் வெளியாகி வருகின்றன. நாளை (ஆக.31) ஜவான் ட்ரெய்லர் வெளியாகவுள்ள நிலையில், தற்போது இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் ஷாருக்கான், அட்லீ, விஜய் சேதுபதி, அனிருத் உள்ளிட்ட ஜவான் படக்குழுவினருடன், மேலும் பல பிரபலங்களும் கலந்துகொண்டனர்.
சாய்ராம் கல்லூரியில் நடைபெற்ற இந்த இசை வெளியீட்டு விழாவில் ஆயிரக்கணக்கான ரசிகர்களும் பங்கேற்று ஷாருக்கானுக்கே வைப் கொடுத்தனர். அவர்களில் பெரும்பாலானோர் விஜய்யின் ரசிகர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆடியோ லான்ச் நிகழ்ச்சியில் முதலில் அனிருத்தின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. ஜவான் படத்தின் பாடல்களை லைவ்-வாக பெர்பாமன்ஸ் செய்தார் அனிருத்.

கடந்த சில தினங்களாகவே லியோ, ஜெயிலர் என அடுத்தடுத்து அனிருத் செம்ம மாஸ் வைப் கொடுத்து வருகிறார். அந்த வரிசையில் தற்போது ஜவான் பாடல்களிலும் மாஸ் காட்டியுள்ளார். இந்நிலையில், ஜவான் இசை வெளியீட்டு விழாவில் அனிருத்தின் ராக்கிங் ஃபெர்பாமன்ஸ் ரசிகர்களை ஆட்டம் போட வைத்தது. அவர்களை மட்டுமில்லாமல் ஷாருக்கானையும் மேடையேறி ஆட்டம் போட வைத்துள்ளது.
ஜவான் ஃபர்ஸ்ட் சிங்கிளாக வெளியான 'வந்த இடம்' பாடலை அனிருத் பாடிக் கொண்டிருக்க, கீழே இருந்த ஷாருக்கான் மேடையில் ஏறி குத்தாட்டம் போட்டார். அனிருத்தும் ஷாருக்கானும் ஆடியது ரசிகர்களுக்கு செம்ம ட்ரீட்டாக இருந்தாலும், அவர்கள் போட்ட ஸ்டெப் என்னவோ கவுண்டமணியின் ஸ்டைலில் இருந்தது. கோலிவுட் ஹீரோக்களை போல ஈகோ பார்க்காமல், ரசிகர்களுக்காக ஜாலியாக ஆட்டம் போட்டு அசரடித்தார் ஷாருக்கான். தற்போது இந்த வீடியோ டிவிட்டரில் ட்ரெண்டிங்கில் உள்ளது.


Click it and Unblock the Notifications











