Jawan: ஜவானுக்காக சம்பளத்தை குறைத்தாரா ஷாருக்கான்..? ஓனரே அவர்தானப்பா.. இது தெரியாம உருட்டக் கூடாது
மும்பை: ஷாருக்கானின் ஜவான் திரைப்படம் செப்டம்பர் 7ம் தேதி வெளியாகவுள்ளது.
அட்லீ இயக்கியுள்ள இந்தப் படத்தில் ஷாருக்கான் ஹீரோவாக நடித்துள்ளதோடு, அவரே சொந்தமாக தயாரித்துள்ளார்.
ஷாருக்கானுடன் நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இப்படத்திற்காக ஷாருக்கான் தனது சம்பளத்தை குறைத்ததாக சொல்லப்பட்டது உண்மையில்லை என தற்போது தெரியவந்துள்ளது.

ஜவானுக்காக சம்பளத்தை குறைத்தாரா ஷாருக்கான்:ஷாருக்கான் நடிப்பில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஜவான் திரைப்படம் செப்டம்பர் 7ம் தேதி வெளியாகவுள்ளது. இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகியுள்ள இப்படத்தை அட்லீ இயக்கியுள்ளார். ஷாருக்கானுடன் நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர், அனிருத் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில், கடந்த வாரம் வெளியான ஜவான் ட்ரெய்லர் ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது. 24 மணி நேரத்தில் 100 மில்லியன் பார்வைகளையும் கடந்து சாதனைப் படைத்தது. இதனால், விரைவில் ஜவான் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் உட்பட மற்ற அப்டேட்களும் வெளியாகும் என சொல்லப்படுகிறது. இதனிடையே ஜவான் படத்திற்காக விஜய் சேதுபதி, நயன்தாரா, அனிருத் ஆகியோர் வாங்கிய சம்பளம் குறித்து தகவல்கள் வெளியாகின.
அதன்படி, விஜய் சேதுபதிக்கு 20 கோடியும், நயன்தாராவுக்கு 10 கோடியும், ராக்ஸ்டார் அனிருத்துக்கு 8 கோடி ரூபாயும் கொடுக்கப்பட்டுள்ளதாம். அதேநேரம் ஜவான் படத்தில் பணத்துக்காக நடிக்கவில்லை என்றும், ஷாருக்கானுக்காக தான் நடித்ததாகவும் கூறியிருந்தார். இதனிடையே ஜவான் படத்திற்காக ஷாருக்கான் தனது சம்பளத்தை குறைத்ததாக தகவல்கள் வெளியாகின.

வழக்கமாக ஒரு படத்துக்காக 150 முதல் 200 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்கும் ஷாருக்கான், ஜவானுக்காக 100 கோடி மட்டுமே வாங்கியதாக செய்திகள் வெளியாகின. ஆனால், இது உண்மையில்லை என்றும், ஜவான் படத்தின் தயாரிப்பாளரே ஷாருக்கான் தான் என்பதால் அவர் சம்பளத்தை குறைக்க வேண்டிய அவசியமில்லை எனவும் சினிமா விமர்சகர்கள் கூறியுள்ளனர்.
ஷாருக்கான் தான் ஜவான் படத்தின் தயாரிப்பாளர் என்பது தெரியாமலேயே அவர் சம்பளத்தை குறைத்துவிட்டதாக உருட்டக் கூடாது என நெட்டிசன்களும் ட்ரோல் செய்து வருகின்றனர். அதேபோல், ஜவான் படத்தின் மொத்த லாபமும் ஷாருக்கானுக்கு மட்டும் தான் என்பது குறிப்பிடத்தக்கது. ப்ரீ-ரிலீஸ் பிஸினஸ் மூலம் ஜவான் படம் 300 கோடி ரூபாய் வசூலித்துவிட்ட நிலையில், பாக்ஸ் ஆபிஸியில் குறைந்தது 1500 கோடி ரூபாய் வரை கலெக்ஷன் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











