Jawan: அந்த விஷயத்தில் லியோவை முந்திய ஜவான்... ஷாருக்கான் போஸ்டரில் மெர்சல் செய்த அட்லீ!
சென்னை: ஷாருக்கானின் ஜவான் திரைப்படம் வரும் (செப் 7) 7ம் தேதி வெளியாகவுள்ளது.
அட்லீ இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள ஜவான், பான் இந்தியா படமாக ரிலீஸாவது குறிப்பிடத்தக்கது.
இதனால், ஷாருக்கானின் ஜவான் படத்திற்கு ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது.
ஜவான் திரைப்படம் ஐமேக்ஸ் டெக்னாலஜியில் ரிலீஸாக உள்ள நிலையில், ஷாருக்கானின் மிரட்டலான போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

ஷாருக்கானின் ஐமேக்ஸ் போஸ்டர்: கடந்த மாதம் முழுவதும் ரஜினியின் ஜெயிலர் ஃபீவரில் இருந்தனர் ரசிகர்கள். ரஜினியின் ஜெயிலர் மிகப் பெரிய வெற்றிப் பெற்றதோடு பாக்ஸ் ஆபிஸிலும் 600 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்தது. இந்நிலையில் தற்போது ஷாருக்கானின் ஜவான் திரைப்படம், பாக்ஸ் ஆபிஸ் ரேஸில் மாஸ் காட்ட ரெடியாகவுள்ளது. அட்லீ இயக்கியுள்ள இந்தப் படம் செப்டம்பர் 7ம் தேதி ரிலீஸாகிறது.
முதன்முறையாக பாலிவுட்டில் என்ட்ரி கொடுக்கும் அட்லீ, தனது முதல் படத்திலேயே ஷாருக்கானை ஹீரோவாக நடிக்க வைத்துவிட்டார். ஷாருக்கான் மட்டுமில்லாமல் விஜய் சேதுபதி, தீபிகா படுகோன், நயன்தாரா என சூப்பரான காம்போவுடன் ஜவான் படத்தை இயக்கியுள்ளார். அதேபோல், அட்லீ - அனிருத் கூட்டணியில் உருவான முதல் படமாகவும் ஜவான் அமைந்துள்ளது. இந்நிலையில், ஜவான் இசை வெளியீட்டு விழா இரு தினங்களுக்கு முன்னர் சென்னையில் நடைபெற்றது.
அதன் தொடர்ச்சியாக நேற்று ஜவான் ட்ரெய்லரையும் படக்குழு வெளியிட்டது. பக்கா ஆக்ஷன் என்டர்டெயினராக உருவாகியுள்ள ஜவான் ட்ரெய்லர், இந்தப் படம் மீதான எதிர்பார்ப்பையும் எகிற வைத்துள்ளது. ஷாருக்கானின் ஹீரோயிசம் விஜய் சேதுபதியின் வில்லத்தனம் இரண்டுமே ஜவான் படத்தை ஃபேன் பாய் சம்பவமாக மாற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே ஷாருக்கானின் போஸ்டர் ஒன்று தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

அதாவது ஜவான் படத்தை ஐமேக்ஸ் டெக்னாலஜியில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இதனையடுத்து இதற்கான அபிஸியல் அப்டேட் ஷாருக்கானின் போஸ்டருடன் வெளியாகியுள்ளது. இந்த போஸ்டரில் மொட்டை தலை, கையில் கன் என படு மிரட்டலாக மாஸ் காட்டுகிறார் ஷாருக்கான். விஜய்யின் லியோ படத்தை ஐமேக்ஸ் டெக்னாலஜியில் வெளியிட லோகேஷ் கனகராஜ் பிளான் செய்திருந்தார்.
ஆனால், அதற்கு முன்னதாகவே அட்லீயின் ஜவான் ஐமேக்ஸ் டெக்னாலஜியில் ரிலீஸாகவிருப்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்க வைத்துள்ளது. இதனிடயே ஜவான் ட்ரெய்லர் துபாயில் உள்ள உயரமான கட்டடமான புர்ஜ் கலீபாவில் நேற்று திரையிடப்பட்டது. சென்னையில் நடைபெற்ற இசை வெளியீட்டு விழாவைத் தொடர்ந்து, புர்ஜ் கலீபாவில் ட்ரெய்லர் ஸ்க்ரீன் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











