Jawan Trailer: ஜெயிலர் ஃபீவர் ஓவர்... ஜவான் ட்ரெய்லர் லோடிங்... சைலண்டாக வேலையை தொடங்கிய அட்லீ!

சென்னை: பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நடித்துள்ள ஜவான் திரைப்படம் செப்டம்பர் 7ம் தேதி ரிலீஸாகிறது.

அட்லீ இயக்கியுள்ள இந்தப் படம் இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளிலும் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஷாருக்கானுடன் விஜய் சேதுபதி, நயன்தாரா, தீபிகா படுகோனே உள்ளிட்ட பலரும் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

ஜவான் வெளியாக இன்னும் இரு வாரங்களே உள்ளதால், ட்ரெய்லரை வெளியிட அட்லீ ரெடியாகிவிட்டாராம்.

 Jawan: Shah Rukh Khans Jawaan Trailer is expected to be released soon

ஜவான் ட்ரெய்லர் லோடிங்: பாலிவுட்டில் கடந்த இரண்டு ஆண்டுகளாக பாய்காட் பிரச்சினை தலைதூக்கியிருந்தது. இதனால் அமீர்கான், அக்‌ஷய் குமார் உள்ளிட்ட டாப் ஹீரோக்களின் படங்கள் கூட மிக மோசமான தோல்வியைத் தழுவியது. ஆனால், இதற்கெல்லாம் சேர்த்து வைத்து பாக்ஸ் ஆபிஸில் மாஸ் காட்டினார் ஷாருக்கான். கடந்த ஜனவரியில் வெளியான பதான் திரைப்படம், ஷாருக்கானுக்கு வெறித்தனமான ஹிட் கொடுத்தது.

இதன் தொடர்ச்சியாக அடுத்து ஜவான் படத்தில் சம்பவம் செய்ய காத்திருக்கிறார் ஷாருக்கான். இதுவரை கோலிவுட்டில் மாஸ் காட்டிய இயக்குநர் அட்லீ, இந்தப் படம் மூலம் பாலிவுட்டில் என்ட்ரியாகிறார். ஷாருக்கான் கொடுத்த முதல் வாய்ப்பிலேயே அட்லீ சிக்சர் அடித்துவிட்டதாக பாலிவுட் வட்டாரங்கள் கூறி வருகின்றன. ஜூன் 2ம் தேதி வெளியாகவிருந்த ஜவான், தற்போது செப்டம்பர் 7ம் தேதி ரிலீஸாகிறது.

ஷாருக்கானுடன் விஜய் சேதுபதி, நயன்தாரா, தீபிகா படுகோன், ப்ரியா மணி, யோகி பாபு உள்ளிட்ட பலர் ஜவான் படத்தில் நடித்துள்ளனர். ராக்ஸ்டார் அனிருத் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். ஜவான் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானதில் இருந்தே அதிக எதிர்பார்ப்பு காணப்பட்டது. ஜவான் க்ளிம்ப்ஸ், ஃபர்ஸ்ட் சிங்கிள், செகண்ட் சிங்கிள் ஆகியவை அடுத்தடுத்து வெளியாகி இந்த எதிர்பார்ப்பை இன்னும் எகிற வைத்தது.

இந்நிலையில் தற்போது ஜவான் ட்ரெய்லருடன் தரமான ட்ரீட் கொடுக்க ரெடியாகிவிட்டார் அட்லீ. ஏற்கனவே வெளியான க்ளிம்ப்ஸ் வீடியோவே ட்ரெய்லர் போல மிரட்டலாக உருவாகியிருந்தது. இதுபோதாது என ஸ்பெஷலாக ஒரு ட்ரெய்லர் எடிட் செய்துவிட்டு ரசிகர்களுக்கு ஹைப் கொடுக்க காத்திருக்கிறது ஜவான் டீம். கடந்த ஒரு மாதமாக சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் ஃபீவர் தான் உச்சத்தில் இருந்தது.

ஆகஸ்ட் 10ம் தேதி வெளியான ஜெயிலர், இதுவரை 500 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது. ஜெயிலர் விமர்சனம், பாக்ஸ் ஆபிஸ் கலெக்‌ஷன் என பரபரப்பாக இருந்த கோலிவுட் இப்போது தான் கொஞ்சம் இயல்புநிலைக்கு திரும்பியுள்ளது. அதனால் ஜவான் ட்ரெய்லரை வெளியிட்டு ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் ட்ரீட் கொடுக்க அட்லீ பிளான் செய்துள்ளாராம். எனவே எப்போது வேண்டுமானாலும் ஜவான் ட்ரெய்லர் வெளியாகும் என சொல்லப்படுகிறது.

இதனையடுத்து ஜெயிலர் ட்ரெய்லர் என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டிங்கில் உள்ளது. இதனிடையே ஜவான் படத்தில் விஜய்யும் ஒரு கேமியோ ரோலில் நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. போலீஸ் கேரக்டரில் சில நிமிடங்கள் வந்து போகிறாராம் விஜய். இந்த அப்டேட்டும் ஷாருக்கானின் ஜவான் படத்தை அதிகம் எதிர்பார்க்க வைத்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X