Jawan: சென்னையில் ஜவான் இசை வெளியீட்டு விழா... ஷாருக்கானின் சர்ப்ரைஸ் பிளான் இதுதானா..?
சென்னை: பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நடித்துள்ள ஜவான் திரைப்படம் செப்டம்பர் 7ம் தேதி ரிலீஸாகிறது.
அட்லீ இயக்கத்தில் இந்தியில் உருவாகியுள்ள இந்தப் படம், தமிழ், தெலுங்கு மொழிகளிலும் வெளியாகவுள்ளது.
ஷாருக்கானுடன் விஜய் சேதுபதி, தீபிகா படுகோன், நயன்தாரா உள்ளிட்ட பலர் ஜவானில் நடித்துள்ளனர்.
இந்நிலையில் ஜவான் படத்தின் இசை வெளியீட்டு விழாவை சென்னையில் நடத்த முடிவு செய்துள்ளாராம் ஷாருக்கான்.

சென்னையில் ஜவான் இசை வெளியீட்டு விழா: பாலிவுட் பாட்ஷா ஷாருக்கானின் ஜவான் திரைப்படம் செப்டம்பர் 7ம் தேதி வெளியாகிறது. இந்தியில் உருவாகியுள்ள இந்தப் படம் தமிழ், தெலுங்கு மொழிகளிலும் ரிலீஸாக உள்ளதால், பான் இந்தியா சினிமா ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்பில் உள்ளனர். முக்கியமாக இந்தப் படத்தை கோலிவுட் இயக்குநர் அட்லீ இயக்கியுள்ளார்.
இதுவரை தமிழ்ப் படங்களை மட்டுமே இயக்கிய அட்லீ, முதன்முறையாக பாலிவுட்டில் என்ட்ரி கொடுக்கவுள்ளார். இதனால், அட்லீயின் மேக்கிங் எப்படி இருக்கும் என பார்க்க பாலிவுட் ரசிகர்கள் வெயிட்டிங்கில் உள்ளனர். ஷாருக்கானுடன் விஜய் சேதுபதி, நயன்தாரா, விஜய் சேதுபதி, யோகி பாபு, ப்ரியாமணி உள்ளிட்ட பலர் ஜவானில் நடித்துள்ளனர். அனிருத் இசையில் அடுத்தடுத்து பாடல்கள் வெளியான நிலையில், தற்போது இசை வெளியீட்டு விழா குறித்து தகவல் கிடைத்துள்ளது.
ஜாவன் பாலிவுட் மூவி என்றாலும், இயக்குநர் அட்லீ, விஜய் சேதுபதி, நயன்தாரா, யோகி பாபு, அனிருத் என பலரும் கோலிவுட் இண்டஸ்ட்ரியை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் ஜவான் இசை வெளியீட்டு விழாவை சென்னையில் நடத்த திட்டமிட்டுள்ளாராம் ஷாருக்கான். மிகப் பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஜவான் இசை வெளியீட்டு விழா, ஆகஸ்ட் 30ம் தேதி நடைபெறும் என சொல்லப்படுகிறது.
இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜவான் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெறுவதால், இதில் கோலிவுட்டைச் சேர்ந்த பிரபலங்கள் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்கலாம் என சொல்லப்படுகிறது. அதுவும் தளபதி விஜய் இதில் ஸ்பெஷல் கெஸ்ட்டாக இருக்கும் என்ற தகவல்கள் தீயாகப் பரவி வருகின்றன. இதனிடையே ஜவானில் விஜய் ஒரு கேமியோ ரோலில் நடித்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
இசை வெளியீட்டு விழாவைத் தொடர்ந்து ஜவான் ப்ரொமோஷன் நிகழ்ச்சிகளும் சென்னையில் நடைபெற உள்ளதாகக் கூறப்படுகிறது. ஜவான் இசை வெளியீட்டு விழாவில் அட்லீயின் அடுத்த திரைப்படம் குறித்த அப்டேட் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அது அட்லீ - விஜய் இணையும் படமாக இருக்கும் என்றும் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











