Jawan: அட்லீக்கு கெடு விதித்த ஷாருக்கான்... ஜவான் ரிலீஸ் தள்ளிப்போக இதுதான் காரணமா?

மும்பை: ஷாருக்கானின் ஜவான் படத்தின் புதிய ரிலீஸ் தேதி நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

அதன்படி ஜூன் 2ல் வெளியாக வேண்டிய ஜவான் திரைப்படம் செப்டம்பர் 7ம் தேதி ரிலீஸாகிறது.

கடைசி நேரத்தில் ஜவான் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டதால் ஷாருக்கான் ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.

இந்நிலையில், ஜவான் ரிலீஸ் தேதி திடீரென ஒத்தி வைக்கப்பட்டது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

 Jawan: SRK was not happy... Jawan has been postponed due to some reshoots

அட்லீயை விரட்டிய ஷாருக்கான்: அட்லீயின் இயக்கத்தில் கடந்த 4 ஆண்டுகளாக உருவாகி வரும் திரைப்படம் ஜவான். முதன்முறையாக பாலிவுட் சென்ற அட்லீ, சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நடிப்பில் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். ஷாருக்கானுடன் விஜய் சேதுபதி, நயன்தாரா, பிரியாமணி, தீபிகா படுகோன், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர், அனிருத் இசையமைத்துள்ளார்.

ஜவான் படத்தில் ஷாருக்கான் இரட்டை வேடங்களில் நடித்துள்ளாராம். அதேபோல், இந்தப் படத்தின் கதை தமிழில் ஹிட் அடித்த ஒரு படத்தின் காப்பியாக இருக்கும் எனவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில், ஜவான் படத்தின் ரிலீஸ் தேதி கடைசி நேரத்தில் மாற்றப்பட்டுள்ளது ஷாருக்கான் உள்ளிட்ட அவரது ரசிகர்களுக்கே ஏமாற்றமாக அமைந்துள்ளது. இதற்கு அட்லீ தான் காரணம் என பாலிவுட் வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

ஆரம்பத்தில் இருந்து ஜவான் ஷூட்டிங் தாமதமாக தான் நடைபெற்றதாகச் சொல்லப்படுகிறது. இதனால், அடிக்கடி அட்லீ மீது ஷாருக்கானுக்கு கோபம் வந்துள்ளது. ஒருசில நேரங்களில் அட்லீயை ஷாருக்கான் ரொம்பவே ஸ்டிரிக்ட்டாக வார்னிங் செய்திருந்தாராம். ஆனால், அப்படியிருந்தும் ஜவான் ஷூட்டிங் லேட்டாகிவிட்டதாம். அதுமட்டும் இல்லாமல் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகளையும் ஜவ்வாக இழுத்து வருகிறாராம் அட்லீ.

இதனிடையே ஜவான் டீசரும் இன்னும் ரெடியாகவில்லையாம். அதேபோல் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகளின் போது ஜவான் படத்தைப் பார்த்த ஷாருக்கான், சில காட்சிகள் திருப்தியில்லை என அட்லீயிடம் சொல்லிவிட்டாராம். மேலும், இந்தக் காட்சிகளை மீண்டும் எடுக்க வேண்டும் என அட்லீக்கு ஆர்டர் போட்டுள்ளாராம். இதனால் தான் ரிலீஸ் தேதி செப்டம்பர் மாதத்துக்கு மாற்றப்பட்டுள்ளதாம்.

 Jawan: SRK was not happy... Jawan has been postponed due to some reshoots

அதேபோல், செப்டம்பர் இறுதியில் பிரசாந்த் நீல் இயக்கிய பிரபாஸின் சலார் ரிலீஸாகிறது. அதற்கு முன்னதாகவே ஜவான் படத்தை ரிலீஸ் செய்தால் தான் பாக்ஸ் ஆபிஸில் கல்லா கட்ட முடியும் என ஷாருக்கான் பிளான் செய்துள்ளாராம். காரணம், ஜவான் வெளியாகும் முன்பே இந்தப் படத்தின் கதை குறித்து சில செய்திகள் வெளியாகி வைரலாகி விட்டன. அதனால், அட்லீயை நம்பி பலனில்லை என்ற முடிவுக்கு வந்துவிட்டாராம் ஷாருக்கான்.

முன்னதாக, ஜவான் டீசர் இன்னும் ரெடியாகவில்லை என, ஷாருக்கான் இரவோடு இரவாக அட்லீயின் வீட்டுக்கேச் சென்றதாக சொல்லப்படுகிறது. மேலும், இரண்டு வாரங்களுக்கு முன்னர் மும்பை பிலிம் சிட்டியில் நடந்த படப்பிடிப்பிலும் அட்லீயிடம் கொஞ்சம் கோபமாகவே நடந்துகொண்டாராம் ஷாருக்கான். இந்நிலையில், இந்தத் தகவல்களை மறைக்க தான் அட்லீ, நயன்தாரா, விஜய் சேதுபதி ஆகியோருடன் பணியாற்றியதில் மகிழ்ச்சி என ஷாருக்கான் தெரிவித்ததாக சொல்லப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X