Nayanthara 9Skin: கோலிவுட் கிம் கர்தாஷியனாக மாறிய நயன்தாரா.. பெரிய லெவல் பிசினஸ் போல!
சென்னை: லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா கோலிவுட்டின் புதிய கிம் கர்தாஷியனாகவே மாறி விடுவார் என்றே தெரிகிறது. லேட்டஸ்டாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நயன்தாரா வெளியிட்டுள்ள போஸ்ட்கள் ரசிகர்களை மட்டுமின்றி பல பிரபலங்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
நடிகை நயன்தாரா கடந்த ஆறு வருடங்களாக இந்தப் புதிய பிசினஸை ஆரம்பிக்க பல முயற்சிகள் மேற்கொண்டு வந்ததாகவும் அதன் விளைவாக தற்போது இயற்கை மற்றும் அறிவியல் கலந்த ஸ்கின் கேர் ப்ராடக்ட்களை தயாரித்து 9 ஸ்கின் எனும் நிறுவனத்தை ஆரம்பித்து இருப்பதாக கூறியுள்ளார்.

நயன்தாராவின் புதிய தொழில்: சினிமாவில் எந்த அளவுக்கு ஆர்வத்தை செலுத்தி வருகிறாரோ நயன்தாரா அதே அளவுக்கு பிசினஸிலும் ஈடுபாடு செலுத்தி வருகிறார். சர்வதேச சூப்பர் மாடலான கிம் கர்தாஷியன் இதே போலத்தான் நடிப்பைத் தாண்டி ஸ்கின் கேர் ப்ராடக்ட்கள், உள்ளாடை கம்பெனி உள்ளிட்டவற்றை ஆரம்பித்து அமெரிக்காவின் பில்லியனியராக மாறியுள்ளார்.
பாலிவுட்டில் நடிகை கத்ரீனா கைஃப் இதைப் போன்ற அழகு சாதன பொருட்களின் நிறுவனத்தை ஆரம்பித்து நிலையில், அதில் தென்னிந்தியாவில் இருந்து நடிகை நயன்தாராவை விளம்பரத்துக்காக அழைத்து நடத்திய விளம்பர வீடியோ சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகி நவீன் ட்ரெண்ட் ஆனது.

9 ஸ்கின்: இந்நிலையில் தென்னிந்தியாவில் நாமும் புதிய அழகு சாதன நிறுவன தொழிலைத் தொடங்கலாம் என்கிற முடிவுக்கு நயன்தாரா வந்த நிலையில் தற்போது சருமத்தை பாதுகாக்கும் 9 ஸ்கின் நிறுவனத்தை வரும் செப்டம்பர் 29-ஆம் தேதி முதல் தொடங்க உள்ளதாக தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அந்த விளம்பர பேனர்களில் நடிகை நயன்தாரா பளிச்சிடும் அழகைக் காட்டி போஸ் கொடுத்து இருப்பதை பார்த்து ரசிகர்கள் வாயை பிளந்து உள்ளனர்.
பாலிவுட்டிலும் பிரபலம்: இயக்குநர் அட்லீ இயக்கத்தில் சமீபத்தில் சாருக் கான் நடித்த ஜவான் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்து பாலிவுட்டிலும் அறிமுகமாகியுள்ளார் நயன்தாரா. தென்னிந்தியாவின் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வந்த நயன்தாரா தற்போது இந்தியாவின் லேடி சூப்பர் ஸ்டார் ஆகவே மாறியுள்ளார். இந்நிலையில் தனது புதிய பிசினஸ் செய்யும் விளம்பரப்படுத்தி மிகப்பெரிய அளவில் வருமானத்தை ஈட்ட திட்டமிட்டுள்ளார் என்பது தெரிகிறது.


Click it and Unblock the Notifications











