Jawan: “ரிஸ்க் வேண்டாம்..” ஜவான் இசை வெளியீட்டு விழாவை ஸ்கிப் செய்த விஜய்... ஏமாற்றத்தில் அட்லீ!

சென்னை: பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நடித்துள்ள ஜவான் படத்தை அட்லீ இயக்கியுள்ளார்.

கோலிவுட்டில் இருந்து பாலிவுட் சென்றுள்ள அட்லீக்கு, ஜவான் சிறப்பான ஓபனிங் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாகவுள்ள இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெறவுள்ளது.

 Jawan: Thalapathy Vijay will not be attending the Jawan Audio Launch

இதில் விஜய் கலந்துகொள்ளலாம் என சொல்லப்பட்ட நிலையில், அதற்கு வாய்ப்பே இல்லை என தெரியவந்துள்ளது.

ஜவான் இசை வெளியீட்டு விழாவில் விஜய்..?: பாலிவுட்டில் 30 ஆண்டுகளுக்கும் மேல் சூப்பர் ஸ்டாராக கலக்கி வருபவர் ஷாருக்கான். பாக்ஸ் ஆபிஸ் கிங், பாலிவுட் பாட்ஷா என இன்னும் பலவிதமாக ஷாருக்கானை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இவரது நடிப்பில் கடந்த ஜனவரியில் வெளியான பதான் இண்டஸ்ட்ரி ஹிட் படமாக அமைந்தது.

 Jawan: Thalapathy Vijay will not be attending the Jawan Audio Launch

அதனைத் தொடர்ந்து ஷாருக்கான் நடிப்பில் வெளியாகவுள்ள திரைப்படம் ஜவான். அட்லீ இயக்கியுள்ள இந்தப் படத்தை ஷாருக்கான் தனது ரெட் சில்லிஸ் சார்பில் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார். ஷாருக்கானுடன் விஜய் சேதுபதி, நயன்தாரா, தீபிகா படுகோன், யோகி பாபு, ப்ரியாமணி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கோலிவுட் ராக்ஸ்டார் அனிருத் ஜவான் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இந்தத் திரைப்படம் செப்டம்பர் 7ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. இந்தியில் உருவாகியுள்ள இந்தப் படம் தமிழ், தெலுங்கு மொழிகளிலும் ரிலீஸாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இயக்குநர் அட்லீ, விஜய் சேதுபதி, நயன்தாரா, யோகி பாபு, அனிருத் என பலரும் கோலிவுட் இண்டஸ்ட்ரியை சேர்ந்தவர்கள். இதனால் ஜவான் இசை வெளியீட்டு விழாவை சென்னையில் நடத்த திட்டமிட்டுள்ளாராம் ஷாருக்கான்.

அதன்படி, ஆகஸ்ட் 30ம் தேதி ஜவான் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெறும் என சொல்லப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் இன்னும் வெளியாகவில்லை என்றாலும், இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் ஜவான் இசை வெளியீட்டு விழாவில் தளபதி விஜய் பங்கேற்கலாம் என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்தது.

 Jawan: Thalapathy Vijay will not be attending the Jawan Audio Launch

விஜய்யின் நெருங்கிய தம்பிகளின் லிஸ்ட்டில் அட்லீக்கு எப்போதும் இடம் உண்டு. அதேபோல், ஷாருக்கான், விஜய் இருவருமே நண்பர்கள் என்பதால், ஜவான் இசை வெளியீட்டு விழாவில் விஜய் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போது அதற்கு வாய்ப்பே இல்லையென சொல்லப்படுகிறது. லியோ படப்பிடிப்பை முடித்துவிட்டு வெளிநாடு சென்ற விஜய், விரைவில் தளபதி 68ல் நடிக்கவுள்ளார்.

இந்தப் படத்திற்கான ப்ரீ புரொடக்‌ஷன் பணிகளுக்காக வெங்கட் பிரபு, விஜய் ஆகியோர் லாஸ் ஏஞ்சல்ஸ் சென்றுள்ளனர். தளபதி 68 ஷூட் விரைவில் தொடங்கும் என்பதால், அதற்கான வேலைகளை முடிக்கும் பிஸியில் ஜவான் இசை வெளியீட்டு விழாவை ஸ்கிப் செய்துள்ளாராம் விஜய். இதனால் விஜய்யின் செல்லத் தம்பியான அட்லீ ஏமாற்றத்தில் உள்ளாராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X