Jawan Trailer - இந்திய சினிமா வரலாற்றில் முதல்முறை.. ஜவான் செய்த செம சாதனை
சென்னை: Jawan Trailer (ஜவான் ட்ரெய்லர்) ஜவான் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி 24 மணி நேரத்தில் மிகப்பெரிய சாதனையை படைத்திருக்கிறது.
குறும்படம் எடுத்து அதன் மூலம் இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குநராக இணைந்தார் அட்லீ. நண்பன் உள்ளிட்ட படங்களில் உதவி இயக்குநராக இருந்த அவர் ஷங்கரின் ஆஸ்தான சீடர்களில் ஒருவர். அதனையடுத்து ஆர்யா, நயன்தாரா, நஸ்ரியா, ஜெய் உள்ளிட்டோரை வைத்து ராஜா ராணி படத்தை இயக்கினார். முதல் படமே மெகா ஹிட்டானது. படம் மௌனராகம் போல் இருந்ததாக கூறப்பட்டாலும் அட்லீயின் மேக்கிங் பரவலாக பேசப்பட்டது.

மெர்சல் செய்த அட்லீ: அதனைத் தொடர்ந்து தெறி படத்தை இயக்கினார். இரண்டாவது படமே விஜய்யை வைத்து இயக்கும் வாய்ப்பு கிடைத்ததால் அதை சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற முனைப்பில் பணியாற்றினார். படம் சூப்பர் ஹிட்டானாலும் சத்ரியன் படத்தின் அறிவிக்கப்படாத ரீமேக்காக அமைந்தது என்ற விமர்சனம் எழுந்தது. அதனைத் தொடர்ந்து விஜய்யை வைத்து மெர்சல், பிகில் படங்களை இயக்கினார். இதில் பிகில் படம் தோல்வியை சந்தித்தது. மெர்சல் படம் வசூலில் சாதனை படைத்தது.
ஹிந்தியில் அட்லீ: படங்களை அப்பட்டமாக காப்பியடிக்கிறார் அட்லீ என்ற விமர்சனம் எழுந்தாலும் அவர் இயக்கும் படங்கள் வசூலை அள்ளுவதால் அவருக்கான டிமாண்ட் அதிகரித்தது. அதன்படி தற்போது அவர் ஷாருக்கானை வைத்து ஜவான் படத்தை இயக்கிவருகிறார். இதில் நயன்தாரா, விஜய் சேதுபதி உள்ளிட்டோரும் நடித்திருக்கின்றனர். 2021ஆம் ஆண்டே படத்தின் பணிகள் தொடங்கப்பட்டாலும் சில காரணங்களால் படப்பிடிப்பு முடிவதில் தாமதம் ஏற்பட்டிருந்தது.

ஜவான் ட்ரெய்லர்: இந்தச் சூழலில் ஜவான் படத்தின் ட்ரெய்லர் சில நாட்களுக்கு முன்பு வெளியானது. முழுக்க முழுக்க ஆக்ஷன் மோடில் படம் உருவாகியிருப்பதை ஜவான் ட்ரெய்லர் உறுதி செய்கிறது. மேலும் ஷாருக்கானின் கெட்டப்பும் வித்தியாசமாக இருக்கிறது என்றும்; இதில் அவர் நல்லவரா இல்லை கெட்டவரா என்ற கேள்வியும் ட்ரெய்லரை பார்க்கும்போது எழுவதாகவும் ரசிகர்கள் கூறிவருகின்றனர்.
சாதனை: இந்நிலையில் ஜவான் படத்தின் ட்ரெய்லர் இந்திய சினிமாவில் புதிய சாதனை படைத்திருக்கிறது. அதன்படி ட்ரெய்லர் வெளியாகி 24 மணி நேரத்தில் 112 மில்லியன் பார்வைகளை யூட்யூபில் பெற்றிருக்கிறது. ஒரு ட்ரெய்லர் 24 மணி நேரத்துக்குள் இவ்வளவு பார்வைகளை பெறுவது இந்திய சினிமாவில் இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது. படமானது செப்டம்பர் 7ஆம் தேதி ரிலீஸாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











