Jawan Trailer: “எனக்கு ஆலியாபட் வேணும்..”... வெளியானது ஜவான் ட்ரெய்லர்... வெறித்தனம் காட்டும் ஷாருக்
சென்னை: ஷாருக்கான் நடித்துள்ள ஜவான் படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.
நேற்று ஜவான் இசை வெளியீட்டு விழா நடைபெற்ற நிலையில், தற்போது ட்ரெய்லரும் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே ஜவான் படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டு மாஸ் காட்டியிருந்தது.

அதன் தொடர்ச்சியாக ஜவான் பாடல்கள் வெளியான நிலையில், தற்போது ட்ரெய்லரையும் படக்குழு வெளியிட்டுள்ளது.
வெளியானது ஜவான் ட்ரெய்லர்: ஷாருக்கானின் ஜவான் திரைப்படம் செப்டம்பர் 7ம் தேதி வெளியாகவுள்ளதால், நேற்று இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக தற்போது ஜவான் ட்ரெய்லரையும் படக்குழு வெளியிட்டுள்ளது. முதன்முறையாக பாலிவுட் சென்றுள்ள அட்லீ, ஜவான் படத்தில் தனது மொத்த வித்தையையும் காட்டியதை இந்த ட்ரெய்லரில் பார்க்க முடிகிறது.

"ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தானாம்... அவன் அடுத்தடுத்த போர்ல தோத்துப் போனானாம். நல்ல பசியில, தோத்துப் போன வெறியில, பயங்கர கோவத்துல காட்டுல சுத்திட்டு இருந்தானாம்.." என குட்டி ஸ்டோரியுடன் தொடங்கும் இந்த ட்ரெய்லர், அடுத்தடுத்து ஆக்ஷனில் சம்பவம் செய்கிறது. இந்தப் படத்தில் ஷாருக்கான் அப்பா, மகன் என இரட்டை வேடங்களில் நடித்துள்ளது கன்ஃபார்ம் ஆகியுள்ளது.

அப்பா ஷாருக்கான் ஜவானாகவும், அவருக்காக வில்லனை பழிவாங்கும் மகனாக இன்னொரு ஷாருக்கான் கேரக்டரும் இருக்கும் என தெரிகிறது. அதேபோல், வழக்கம் போல தனது படங்களில் ஹீரோவின் முதல் காதலியை கொலை செய்துவிடும் அட்லீ, ஜவானிலும் தீபிகா படுகோனேவை அப்படி போட்டுத் தள்ளிவிடுவார் என்பது கன்ஃபார்மாகியுள்ளது. கதையை தாண்டி ஜவான் படத்தின் மேக்கிங் தாறுமாறாக இருப்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிறச் செய்துள்ளது.
வில்லனை பழிவாங்குவதற்காக பொதுமக்களை கடத்தி வைத்திருக்கும் ஷாருக்கான், அதன்பின்னர் என்ன செய்தார் என்பதை ஜவான் ட்ரெய்லரில் லீட் கொடுத்துள்ளார் அட்லீ. அதேபோல், விஜய் சேதுபதியின் வயதான தோற்றமும் ரசிகர்களிடம் கவனம் ஈர்த்துள்ளது. ஒட்டுமொத்தமாக பக்கா கமர்சியல் மூவிக்கான அனைத்து அம்சங்களும் ஜவான் ட்ரெய்லரில் இடம்பெற்றுள்ளன.

இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாகியுள்ள ஜவான் ட்ரெய்லர், படம் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரிக்கச் செய்துள்ளது. ஷாருக்கான், விஜய் சேதுபதி தவிர அனிருத்தின் பின்னணி இசையும் ஜவான் படத்திற்கு அதிக ஹைப் கொடுத்துள்ளது.


Click it and Unblock the Notifications











