Jawan: “என்னய்யா நடக்குது இங்க..?” ஜவான் இசை விழாவில் லியோ சத்தம்... மிரண்டு போன ஷாருக்கான்!!

சென்னை: பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நடித்துள்ள ஜவான் படத்தை அட்லீ இயக்கியுள்ளார்.

இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள சாய்ராம் கல்லூரியில் நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக விஜய் கலந்துகொள்வார் என அவரது ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர்.

 Jawan: Vijay fans chant for Leo update at Jawan audio launch

ஆனால், அவர் அமெரிக்கா சென்றுவிட்ட நிலையில், ஜவான் இசை வெளியீட்டு விழாவில் லியோ அப்டேட் கேட்டு ரசிகர்கள் குரல் எழுப்பியது, ஷாருக்கானையே மிரள வைத்துள்ளது.

ஷாருக்கானை மிரள வைத்த விஜய் ரசிகர்கள்: இந்திய சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் கிங், பாலிவுட் பாட்ஷா என ரசிகர்களால் கொண்டாடப்படும் ஷாருக்கான், தற்போது ஜவான் படத்தில் நடித்துள்ளார். முன்னதாக அவரது பதான் திரைப்படம் கடந்த ஜனவரியில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. பாய்காட் பிரச்சாரங்களை கடந்து பாக்ஸ் ஆபிஸில் 1000 கோடிக்கும் மேல் வசூலித்தது. இதனால், ஷாருக்கானின் ஜவான் படத்துக்கு ஆரம்பம் முதலே அதிக எதிர்பார்ப்பு காணப்பட்டது.

 Jawan: Vijay fans chant for Leo update at Jawan audio launch

அட்லீ இயக்கத்தில் இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகியுள்ள இந்தப் படத்தை ஷாருக்கான் சொந்தமாக தயாரித்துள்ளார். பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகியுள்ள ஜவான், முதலில் ஜூன் 2ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இறுதிக்கட்ட படப்பிடிப்பு தாமதமானதால், செப்டம்பர் 7ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதனையடுத்து அடுத்த வாரம் ஜவான் திரைப்படம் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஷாருக்கானுடன் விஜய் சேதுபதி, நயன்தாரா, தீபிகா படுகோன், யோகி பாபு, ப்ரியாமணி உள்ளிட்ட பலர் ஜவான் படத்தில் நடித்துள்ளனர். கோலிவுட் ராக்ஸ்டார் அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். இயக்குநர் அட்லீ, விஜய் சேதுபதி, நயன்தாரா, யோகி பாபு, அனிருத் என பலரும் கோலிவுட் இண்டஸ்ட்ரியை சேர்ந்தவர்கள் என்பதால், ஜவான் இசை வெளியீட்டு விழாவை சென்னையில் நடத்தியுள்ளார் ஷாருக்கான்.

அதேநேரம் இந்த விழாவில் விஜய் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்வார் என முதலில் கூறப்பட்டது. ஆனால், அவரோ தளபதி 68 படத்தின் மேக்கப் டெஸ்ட்டுக்காக அமெரிக்கா சென்றுவிட்டார். இதனால் விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி ஷாருக்கான் ஃபேன்ஸும் ரொம்பவே அப்செட்டாகிவிட்டனர். இந்நிலையில் ஜவான் இசை வெளியீட்டு விழாவுக்காக சென்னை விமான நிலையம் வந்திறங்கிய ஷாருக்கானை ரசிகர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.

 Jawan: Vijay fans chant for Leo update at Jawan audio launch

ஜவான் இசை வெளியீட்டு விழாவில் விஜய் கலந்துகொள்ளாத ஏமாற்றத்தில், அவரது ரசிகர்கள் ஆர்ப்பரித்து வருகின்றனர். ஷாருக்கான், விஜய் சேதுபதி, அட்லீ, அனிருத் உள்ளிட்ட மொத்த படக்குழுவினரும் விழாவில் பங்கேற்றுள்ளனர். ஆனால், அவர்களை கண்டுகொள்ளாத விஜய் ரசிகர்கள், "லியோ லியோ.." என அப்டேட் கேட்டு குரல் எழுப்பி வருகின்றனர். இதனை சற்றும் எதிர்பாராத ஷாருக்கான், விஜய் ரசிகர்களை பார்த்து மிரண்டே போய்விட்டார்.

இதனைப் பார்த்த பொதுமக்கள், இது ஜவான் இசை வெளியீட்டு விழாவா அல்லது லியோ இசை வெளியீட்டு விழாவா என சந்தேகத்தில் உள்ளனர். அட்லீ, ஷாருக்கான் இருவருக்காகவும் ஜவான் படத்தில் விஜய் ஒரு கேமியோ ரோலில் நடித்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது. அதுகுறித்து அபிஸியல் அப்டேட் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X