Jawan: ஜவான் படத்தில் விஜய்..? தளபதி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த அட்லீ... அட பாவமே!

சென்னை: ஷாருக்கான் நடித்துள்ள ஜவான் திரைப்படம் நாளை (செப்.7) உலகம் முழுவதும் வெளியாகிறது.

இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாகும் இந்தப் படத்தை கோலிவுட் இயக்குநர் அட்லீ இயக்கியுள்ளார்.

ஜவான் படத்தில் கோலிவுட் மாஸ் ஹீரோ விஜய் கேமியோ ரோலில் நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.

ஆனால், அதனை மறுத்துள்ள இயக்குநர் அட்லீ, விஜய், ஷாருக்கான் இணையும் படம் குறித்து அப்டேட் கொடுத்துள்ளார்.

 Jawan: Vijay has not played a cameo role in Shah Rukh Khans Jawan

ஜவான் படத்தில் விஜய்..?: பாலிவுட் பாட்ஷா ஷாருக்கானின் ஜவான் திரைப்படம் ரிலீஸுக்கு ரெடியாகிவிட்டதால், ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். நாளை (செப் 7) உலகம் முழுவதும் ரிலீஸாகும் ஜவான் படத்துக்கு ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. இந்தப் படத்தில் ஷாருக்கான் ஹீரோவாக நடித்திருந்தாலும், விஜய் சேதுபதி, நயன்தாரா, யோகி பாபு, இயக்குநர் அட்லீ, இசையமைப்பாளர் அனிருத் பலரும் கோலிவுட் இண்டஸ்ட்ரியை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால், பாலிவுட் அளவிற்கு கோலிவுட், டோலிவுட்டிலும் ஜவான் படத்திற்கு பெரிய ஓபனிங் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தான் ஜவான் இசை வெளியீட்டு விழாவை சென்னையில் நடத்தினார் ஷாருக்கான். இதனிடையே ஜவானில் தளபதி விஜய் கேமியோ ரோலில் நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. கண்டிப்பாக விஜய் ஷாருக்கானுடன் நடித்துள்ளார் என சோஷியல் மீடியா ட்ராக்கர்கள் அடித்துக் கூறினர்.

இதனால், ஷாருக்கானின் ஜவான் ரிலீஸை விஜய் ரசிகர்களும் அதிகம் எதிர்பார்த்திருந்தனர். இந்நிலையில் ஜவானில் விஜய் நடிக்கவில்லை என அட்லீயே வெளிப்படையாக கூறிவிட்டார். ஜவான் ப்ரொமோஷனில் ரசிகர்களுடன் கலந்துரையாடிய அட்லீ, ஜவான் படம் குறித்து பல சுவாரஸ்யங்களை பகிர்ந்து கொண்டார். அப்போது தான் இந்தப் படத்தில் விஜய் நடிக்கவில்லை எனவும், அப்படி நடித்திருந்தால் அதனை நானே கூறியிருப்பேன் என்றும் தெரிவித்தார்.

அதேநேரம் விஜய் - அட்லீ இருவரையும் லீடிங் கேரக்டரில் நடிக்க வைத்து ஒரு திரைப்படம் இயக்க வேண்டும் என திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறினார். ஆனால், அதுபற்றி இப்போதைக்கு எந்த அப்டேட்டையும் வெளியிட முடியாது என சஸ்பென்ஸ் வைத்துள்ளார். மேலும், ஜவான் முழுக்க முழுக்க ஆக்‌ஷன் ஜானரில் உருவாகியுள்ளதாகவும், இது மதுரை முதல் காஷ்மீர் வரையிலான அனைத்து மொழி ரசிகர்களையும் ரசிக்க வைக்கும் எனக் கூறினார்.

ஜவான் படத்தில் விஜய் கண்டிப்பாக நடித்திருப்பார் என எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கு, அட்லீயின் அப்டேட் பெரும் ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. அதேநேரம் விஜய் - ஷாருக்கான் இருவரையும் ஒரே படத்தில் நடிக்க வைப்பேன் என அவர் கூறியது விரைவில் நடக்கும் என்ற நம்பிக்கையில் காத்திருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X