Jawan: ஜவான் படத்தின் டாப் சீக்ரெட்... விஜய் கேமியோ ரோல் கன்ஃபார்ம்... தளபதி சம்பவத்துக்கு ரெடியா?
சென்னை: பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நடித்துள்ள ஜவான் திரைப்படம் நாளை (செப்.7) வெளியாகிறது.
இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாகவுள்ள இந்தப் படத்தை அட்லீ இயக்கியுள்ளார்.
ஷாருக்கானின் ஜவான் படத்திற்கு இந்தியில் மட்டுமின்றி தமிழிலும் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது.
இந்நிலையில், இந்தப் படத்தில் ஷாருக்கானுடன் விஜய்யும் கேமியோ ரோலில் நடித்துள்ளதாக டாப் சீக்ரெட் அப்டேட் வெளியாகியுள்ளது.

ஜவான் படத்தின் டாப் சீக்ரெட்: பாலிவுட் பாட்ஷா ஷாருக்கான் நடித்துள்ள ஜவான் திரைப்படம் நாளை வெளியாகிறது. கடந்த ஜனவரியில் ஷாருக்கானின் பதான் ரிலீஸாகி சூப்பர் ஹிட் அடித்தது. அதனைத் தொடர்ந்து தற்போது வெளியாகும் ஜவான் படத்துக்கும் ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. அட்லீ இயக்கியுள்ள இந்தப் படத்தில் ஷாருக்கானுடன் நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்தியில் உருவாகியுள்ள ஜவான் தமிழ், தெலுங்கு மொழிகளிலும் ரிலீஸாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இதனிடையே ஜவான் படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த வாரம் சென்னையில் நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக ஜவான் ட்ரெய்லரையும் படக்குழு வெளியிட்டது. ஜவான் இசை வெளியீட்டு விழாவில் தளபதி விஜய் கலந்துகொள்வதாக சொல்லப்பட்டது. விஜய்யின் தம்பிகளின் லிஸ்ட்டில் அட்லீ மிக முக்கியமானவர். அதேபோல், ஷாருக்கான், விஜய் இருவருமே நண்பர்கள் என்பதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
ஆனால், தளபதி 68 படத்திற்காக விஜய் அமெரிக்கா சென்றுவிட்டதால், ஜவான் இசை வெளியீட்டு விழாவில் அவர் கலந்துகொள்ளவில்லையாம். அதேநேரம் ஜவானில் விஜய் கேமியோ ரோலில் நடித்துள்ளதாக ஒரு தகவல் வெளியாகி வைரலாகி வருகிறது. ஜவான் படப்பிடிப்பு சென்னையில் நடக்கும் போதே, விஜய்யும் அதில் நடித்துள்ளதாக செய்திகள் வெளியாகின. ஆனால், ஜவான் படக்குழு தரப்பில் இருந்து அதுகுறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.
இந்நிலையில், தற்போது ஷாருக்கானுடன் விஜய் நடித்துள்ளது பற்றி தகவல்கள் வெளியாகியுள்ளன. ஷாருக்கான் - அட்லீ இருவரும் கேட்டுக் கொண்டதால், விஜய் சின்ன கேமியோ ரோலில் நடித்துள்ளதாகவும், இந்த சீன் ரசிகர்களுக்கு செம்ம வைப் கொடுக்கும் எனவும் சொல்லப்படுகிறது. விக்ரம் படத்தில் சூர்யா ரோலக்ஸ் என்ற கேமியோ ரோலில் நடித்திருந்தார். அதேபோல், ஷாருக்கானின் பதான் படத்தில் சல்மான் கான் கேமியோ ரோலில் நடித்திருந்தார்.
இதே ஃபார்முலாவை கையில் எடுத்துள்ள அட்லீ, ஜவானில் விஜய்யை கேமியோ ரோலில் நடிக்க வைத்துள்ளார். சில நிமிடங்களே வரும் விஜய்யின் என்ட்ரி போலீஸ் கெட்டப்பில் இருக்கும் எனவும், தளபதி ரசிகர்களுக்கான தரமான சம்பவமாக இது அமைந்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது. நாளை ஜவான் வெளியாகவிருக்கும் நிலையில், அந்தப் படத்தில் விஜய் நடித்துள்ளது மேலும் எதிர்பார்க்க வைத்துள்ளது.


Click it and Unblock the Notifications











