Jawan: “ஷாருக்கானை பழிவாங்க காத்திருந்தேன்..” ஜவான் விழாவில் விஜய் சேதுபதியின் குட்டி ஸ்டோரி

சென்னை: ஷாருக்கான் - அட்லீ காம்போவில் உருவாகியுள்ள ஜவான் திரைப்படம் செப்டம்பர் 7ம் தேதி வெளியாகிறது. இந்தப் படத்தில் ஷாருக்கானுக்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்துள்ளார். ஏற்கனவே இந்தியில் அறிமுகமாகிவிட்ட விஜய் சேதுபதிக்கு ஜவான் திரைப்படம் பெரிய பிரேக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், ஜவான் இசை வெளியீட்டு விழாவில் பேசிய விஜய் சேதுபதி, ஷாருக்கானை பழிவாங்க காத்திருந்தது குறித்து குட்டி ஸ்டோரி சொல்லி சர்ப்ரைஸ் கொடுத்தார்.

 Jawan: Vijay Sethupathis funny speech at Jawan audio launch event

ஷாருக்கானை பழிவாங்க காத்திருந்தேன்: தமிழில் பல படங்களில் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டாக முகம் காட்டிய விஜய் சேதுபதி, இன்று பான் இந்தியா ஸ்டாராக மாஸ் காட்டி வருகிறார். ரஜினி, கமல், விஜய் போன்ற முன்னணி ஹீரோக்களுக்கு வில்லனாக நடித்துள்ள விஜய் சேதுபதி, தற்போது பாலிவுட் பாட்ஷா ஷாருக்கானுடனும் வில்லனாக மோதியுள்ளார். அட்லீ இயக்கியுள்ள ஜவான் படத்தில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது.

ஷாருக்கான் சொந்தமாக தயாரித்துள்ள ஜவான் படத்தை அட்லீ இயக்கியுள்ளார். பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இந்தப் படம் இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் செப்டம்பர் 7ம் தேதி வெளியாகிறது. இதனையடுத்து ஜவான் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள சாய்ராம் கல்லூரியில் நேற்று மாலை நடைபெற்றது. ஷருக்கான், விஜய் சேதுபதி, அட்லீ, அனிருத், ப்ரியாமணி உட்பட ஏராளமான திரை பிரபலங்களும் ரசிகர்களும் கலந்துகொண்டனர்.

அனிருத்தின் இசை நிகழ்ச்சியுடன் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், ஜவான் உருவானது குறித்த பல சுவாரஸ்யங்களை படக்குழுவினர் பகிர்ந்துகொண்டனர். அப்போது விஜய் சேதுபதியும் ஜவான் படத்தில் நடித்தது குறித்த அனுபவத்தை ஷேர் செய்திருந்தார். ஷாருக்கானுடன் நடித்தது வாழ்வின் மறக்க முடியாத அனுபவம், அவரை போல ஒரு மனிதரை பார்க்கவே முடியாது, எல்லோரிடமும் அன்பாக பழகுவதில் ஷாருக்கான் தி பெஸ்ட் என்றார்..

அதன்பின்னர் ஜாலியான மோடில் பேச ஆரம்பித்த விஜய் சேதுபதி, ஷாருக்கானை பழிவாங்க பல வருடங்களாக காத்திருந்தேன் எனக் கூறி ஷாக் கொடுத்தார். அதாவது, தான் பள்ளியில் படிக்கும்போது ஒரு சேட்டு பெண்ணை காதலித்தேன். ஆனால், அந்த பெண்ணோ 'நான் ஷாருக்கானின் ரசிகை, அவரை மட்டும் தான் லவ் செய்கிறேன்' எனக் கூறிவிட்டது. அப்போது எனக்கு ஷாருக்கானை பழிவாங்க வேண்டுமென தோன்றியது.

அதனை ஜவான் படத்தில் தீர்த்துக்கொண்டேன் என விஜய் சேதுபதி பேசினார். இந்தப் படத்தில் வில்லனாக நடித்துள்ளதால், ஷாருக்கானுடன் மோதும் காட்சிகள் இடம்பெற்றன. அப்போதெல்லாம் அந்த பெண்ணை நினைத்து ஷாருக்கானை பழிவாங்கிக் கொண்டேன் என ஜாலியாக பேசி ரசிகர்களுக்கு வைப் கொடுத்தார். இதனைக் கேட்டுக் கொண்டிருந்த ஷாருக்கானும் சிரித்து மகிழ்ந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X