மருமகளை பார்த்து கத்துக்கோங்க: ஐஸ்வர்யா ராய் மாமியாரை விளாசிய ரசிகர்கள்
Recommended Video

மும்பை:பாலிவுட் நடிகை ஜெயா பச்சன் அனுமதி இன்றி தன்னை புகைப்படம் எடுத்த நபரை திட்டியுள்ளார்.
பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சனின் மாமியாரும், நடிகையுமான ஜெயாவுக்கு தன்னிடம் அனுமதி கேட்காமல் யாராவது புகைப்படம் எடுத்தால் பிடிக்காது. உடனே கோபப்பட்டு திட்டிவிடுவார்.
இந்நிலையில் அவர் கோபப்பட்டு திட்டிய சம்பவம் மீண்டும் நடந்துள்ளது.

ஜெயா
ஜெயா பச்சன் ஹோட்டலில் இருந்து வெளியே வந்தபோது அவரை பார்த்த ரசிகர் ஒருவர் ஆர்வக்கோளாறில் புகைப்படம் எடுத்துவிட்டார். செல்ஃபி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. அந்த நபர் புகைப்படம் எடுத்ததை பார்த்த ஜெயாவுக்கு கோபம் வந்துவிட்டது.
ரசிகர்
அந்த ரசிகரை அழைத்து யாரை கேட்டு என்னை புகைப்படம் எடுத்தாய் என்று கேட்டு ஜெயா பச்சன் திட்டினார். அந்த ரசிகரோ என்ன செய்வது என்று தெரியாமல் சிரித்து மழுப்பினார்.

ஐஸ்வர்யா
ரசிகர்கள் புகைப்படம் எடுத்தால் ஐஸ்வர்யா ராயோ அவரது மகள் ஆராத்யாவோ கோபப்படுவது இல்லை. எப்படி கூலாக இருப்பது என்று உங்களின் மருமகள் அல்லது பேத்தியிடம் கற்றுக் கொள்ளுங்கள் என்று நெட்டிசன்கள் ஜெயா பச்சனை விளாசியுள்ளனர்.

ஆர்வம்
உங்களை புகைப்படம் எடுத்தது வேறு யாரோ அல்ல ரசிகர். உங்கள் மீது உள்ள ப்ரியத்தால் புகைப்படம் எடுத்திருக்கிறார். அதற்கு ஏன் இப்படி தையா, தக்கா என்று குதிக்க வேண்டும். ரொம்ப ஓவராக பண்ண வேண்டாம் என்கிறார்கள் நெட்டிசன்கள்.


Click it and Unblock the Notifications











