துயரத்தை தாங்கும் சக்தியையும், தைரியத்தையும் இளையராஜாவுக்கு கடவுள் வழங்கட்டும்- ஜெ.

இளையராஜாவின் மனைவி ஜீவா கடந்த 1ம் தேதி மரணமடைந்தார். இதையடுத்து அவரது உடலுக்கு திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், கமல்ஹாசன் உள்ளிட்ட திரையுலகினர் நேரில் வந்து அஞசலி செலுத்தினர்.
ஆளுநர் ரோசய்யாவும் இரங்கல் தெரிவித்திருந்தார். இருப்பினும் முதல்வர் ஜெயலலிதா தரப்பில் அஞ்சலியோ, இரங்கலோ தெரிவிக்கப்பட்டதாக தகவல் இல்லை. இந்தநிலையில் ஜீவா மரணமடைந்த 1ம் தேதியன்று இளையராஜாவுக்கு இரங்கல் தெரிவித்து ஜெயலலிதா தகவல் அனுப்பியிருந்தார்.
அந்த செய்தியில்,
தங்களின் அன்பு மனைவி ஜீவா திடீரென்று மாரடைப்பால் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த வருத்தமுற்றேன். இந்த துயர சம்பவத்தினால் ஈடு செய்ய முடியாத, இழப்பு தங்களுக்கு ஏற்பட்டுள்ள போதிலும், இந்த துயரத்தை தாங்கிக் கொள்ளக்கூடிய சக்தியையும், தைரியத்தையும் தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும் அளிக்க வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை நான் பிரார்த்திக்கிறேன்.
அன்பு மனைவியை இழந்து வாடும் தங்களுக்கும், தங்களின் குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தினையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











