ஜெயலலிதா சொன்னால் கரெக்டா தான் இருக்கும்: இது புரியாமல் த்ரிஷா வேற...

By Siva

சென்னை: தனது வாழ்க்கை வரலாற்று படத்தில் யார் நடித்தால் பொருத்தமாக இருக்கும் என்று ஜெயலலிதா கூறிய நடிகையையே நடிக்க வைக்கலாம்.

ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை இயக்குனர் ஏ.எல். விஜய் படமாக எடுக்கப் போவதாக அறிவிப்பு வெளியானது. ஜெயலலிதாவின் பிறந்தநாள் அன்று படப்பிடிப்பு துவங்குகிறது.

படத்தில் ஜெயலலிதாவின் கதாபாத்திரத்தில் யார் நடிக்கப் போகிறார் என்ற ஆவல் ஏற்பட்டுள்ளது.

குழப்பம்

குழப்பம்

ஏ.எல். விஜய் படத்தில் யார் ஜெயலலிதாவாக நடிக்கப் போகிறாரோ என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே நானும் அம்மாவின் வாழ்க்கையை படமாக்குகிறேன் என்று இயக்குனர் ப்ரியதர்ஷினி அறிவித்துள்ளார். அவரும் விஜய்யை போன்றே ஜெயலலிதாவின் பிறந்தநாள் அன்று தான் படப்பிடிப்பை துவங்குகிறார்.

ஐஸ்வர்யா

ஐஸ்வர்யா

தனது வாழ்க்கை வரலாறு படமாக எடுக்கப்பட்டால் ஐஸ்வர்யா ராய் தனது கதாபாத்திரத்தில் நடித்தால் பொருத்தமாக இருக்கும் என்று ஜெயலலிதா பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார். ஏற்கனவே மணிரத்னத்தின் இருவர் படத்தில் ஐஸ்வர்யா ராயின் கதாபாத்திரம் ஜெயலலிதாவின் கதாபாத்திரத்தை சார்ந்தது தான். இருவர் படம் மூலம் தான் ஐஸ்வர்யா ராய் நடிகையானார் என்பது குறிப்பிடத்தக்கது.

கம்பீரம்

கம்பீரம்

ஜெயலலிதாவிடம் அழகு கலந்த கம்பீரம் இருக்கும். அவர் கூறியது போன்று அதே அழகு கலந்த கம்பீரம் ஐஸ்வர்யா ராயிடம் உள்ளது. ஐஸ்வர்யாவை அணுகினால் அவர் நிச்சயம் சம்மதம் தெரிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் விஜய், ப்ரியதர்ஷினியில் யார் ஐஸ்வர்யா ராயை அணுகி ஜெயலலிதாவின் ஆசையை நிறைவேற்றப் போகிறாரோ?

நயன்தாரா

நயன்தாரா

ஜெயலலிதாவாக வித்யா பாலன் அல்லது நயன்தாராவை நடிக்க வைக்க விஜய் அன்ட் கோ ஆலோசிக்கிறதாம். ஜெயலலிதாவின் வாழ்க்கை படமாக்கப்பட்டால் இரும்பு மனுஷியாக நடிக்கத் தயார் என்று பேட்டி அளித்த த்ரிஷாவை பாவம் யாருமே கண்டுகொள்ளவில்லை. ரம்யா கிருஷ்ணனிடமும் கம்பீரம் உள்ளது எனினும் ஜெயலலிதா கூறியது போன்று ஐஸ்வர்யா தான் சரியான ஆள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X