Don't Miss!
- Technology
Mars: செவ்வாய் கிரகத்தில் செல்பி! புகைப்படத்தை வெளியிட்டு அசத்திய நாசா! போட்டிக்கு நீங்களும் வரலாம்!
- News
"பூப்போட்டாராமே".. ஓபிஎஸ்ஸூக்கு "வெள்ளைப்பூ" தந்த பேச்சியம்மாள்.. அதுவும் 3 முறை.. ஹேப்பியில் பன்னீர்
- Lifestyle
ஆண்களே! உங்க விந்தணுக்களின் தரத்தை அதிகரிக்கணுமா? அதுக்கு இந்த உணவுகளை அதிகமா சாப்பிடுங்க..
- Automobiles
இன்னும் என்ன யோசனை... ரொம்ப நாளாக எதிர்பார்த்த டீசல் டொயோட்டாவிற்கான புக்கிங் மீண்டும் தொடங்கியிருக்கு!
- Finance
அதானி குழுமத்தின் டாப் 5 நிறுவனங்களின் கடன் எவ்வளவு.. PSU வங்கிகள், தனியார் வங்கிகளில் எவ்வளவு?
- Sports
கோலிவுட்டில் கால்பதித்தார் தோனி.. முதல் தயாரிப்பின் அறிவிப்பு வெளியானது.. நடிகர்கள் யார் தெரியுமா??
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
புருஷன் அடிச்சா சும்மா இருக்கணுமா.. திருப்பி அடிச்சா பாருங்க.. டிரெண்டாகும் ஜெய ஜெய ஜெய ஜெய ஹே சீன்!
சென்னை: மலையாளத்தில் உருவாகி தமிழ் உள்ளிட்ட மொழிகளில் டப் செய்யப்பட்டு டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகி இருக்கும் 'ஜெய ஜெய ஜெய ஜெய ஹே' படம் தான் தற்போது சோஷியல் மீடியாவில் ஹாட் டாப்பிக்காக மாறி உள்ளது.
இந்த ஆண்டு ஆலியா பாட் நடிப்பில் வெளியான டார்லிங்ஸ் படத்திற்கு கடும் எதிர்ப்புகள் வந்தன. அந்த படத்தின் கதையும் கிட்டத்தட்ட இதே தான்.
அதே போல கணவனிடம் அடி வாங்கி சித்ரவதைப்படும் மனைவி திரும்பி புரூஸ்லி போல கராத்தே அடி கொடுத்தால் எப்படி இருக்கும் என்பதுதான் இந்த 'ஜெய ஜெய ஜெய ஜெய ஹே' படத்தின் கதை. அந்த படத்தில் கணவரை ஹீரோயின் புரட்டி எடுக்கும் காட்சி டிரெண்டாகி வருகிறது.

ஜெய ஜெய ஜெய ஜெய ஹே
இயக்குநர் விபின் தாஸ் இயக்கத்தில் பாசில் ஜோசப் மற்றும் தர்ஷனா ராஜேந்திரன் நடிப்பில் வெளியாகி உள்ள படம் தான் ஜெய ஜெய ஜெய ஜெய ஹே. மலையாளத்தில் முன்னதாக வெளியான தி கிரேட் இந்தியன் கிச்சன் திரைப்படத்திலும் இதே போல மனைவியை கணவன் டார்ச்சர் செய்வதும், கடைசியாக கால்வாய் தண்ணீரை முகத்தில் ஊற்றிவிட்டு தனக்கு பிடித்த நடனத் தொழிலை தேர்வு செய்வதுமாக இருக்கும். அதே போல ஆலியா பாட் நடிப்பில் இந்த ஆண்டு வெளியான டார்லிங்ஸ் படத்தில் கணவரை கடைசியாக தண்டவாளத்தில் வைத்து அவர் சாக காரணமாக இருக்கும் காட்சிகள் பதைபதைக்க வைத்திருக்கும்.

பொண்டாட்டின்னா அடிமையா
மனைவியை கை நீட்டி அறையக் கூடாது என்கிற படிப்பினை மெல்ல மெல்லமாக சினிமா இயக்குநர்களை இளைஞர்கள் மனங்களில் விதைக்க இதுபோன்ற படங்களை தொடர்ந்து எடுத்து வருவது நல்ல விஷயம் தான். டாப்ஸி நடிப்பில் இந்தியில் வெளியான தப்பட் படத்தில் ஒரே ஒரு அறை அறைந்த கணவரை கோர்ட் முன்னாடி நிறுத்தியிருப்பார் டாப்ஸி. அதே போல இந்த படத்தில் மனைவியை அடிமைன்னு நினைக்கும் கணவனை போட்டு புரட்டி எடுக்கிறார் ஜெயாவாக நடித்துள்ள தர்ஷனா ராஜேந்திரன்.

கமெண்ட்ரி வேற
கோழி பண்ணை நடத்தி வரும் ராஜேஷ் மற்றும் அவரது மனைவியான ஜெயாவுக்கும் இடையே நடக்கும் கராத்தே சண்டைக் காட்சிக்கு இயக்குநர் இடையே கமெண்ட்ரி வேற கொடுத்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் அந்த காட்சியை ரசிக்க வைத்து விட்டனர். கடைசி நேரத்தில் வெளியே போயிருந்த நாயகனின் அம்மா மற்றும் சகோதரி வரும் போது ஒரு கிக் விடுவா பாருங்க செம காமெடி.
|
டிரெண்டாகுது
அவ அடிச்சது எல்லாம் அடியா.. அது ஒரு இடி என நாயகனின் அம்மா பேசும் பேச்சை எல்லாம் கேட்டால் படத்தை நிச்சயம் பார்க்க வேண்டும் என்றே தோன்றும். ரியாலிட்டியை தாண்டி ஆணுக்கு பெண் சளைத்தவள் இல்லை என்றும் யூடியூப் பார்த்து சமைக்க மட்டும் இல்லை சண்டையும் பழகிக் கொள்ளலாம் என கற்றுக் கொடுப்பது மட்டுமின்றி பெண்கள் மீது எந்தவொரு ஆணும் கை வைக்கக் கூடாது என்பதை இந்த படம் உணர்த்துகிறது.