தயாரிப்பாளருக்கு ஜெயச்சித்ரா அல்வா நடிகை ஜெயச்சித்ரா ரூ. 73 லட்சம் பணத்தை மோசடி செய்து விட்டதாக பிரபல திரைப்பட பைனான்சியர் குல்சந்த் போத்ரா புகார்கொடுத்துள்ளார்.சென்னை செளகார்பேட்டையில் வசித்து வருபவர் போத்ரா. திரைப்படங்களுக்கு கடனுதவி செய்து வருகிறார். நடிகை ரோஜா மீதுஏற்கனவே பண மோசடி தொடர்பாக வழக்கு தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்தியவர் போத்ரா.இந் நிலையில் சென்னை மாநகர மத்திய குற்றப் பிரிவு அலுவலகத்தில் இன்று ஒரு புகாரைக் கொடுத்தார் போத்ரா. அதில், நடிகைஜெயச்சித்ரா தனக்குச் சொந்தமான ஒரு தோட்டத்தை விற்பது தொடர்பாக என்னை அணுகினார்.அந்தத் தோட்டத்தை நானே வாங்கிக் கொள்வதாக கூறினேன். இதுதொடர்பாக முன் பணம் கொடுத்தேன். நிலத்திற்கானதொகையாக ரூ. 73 லட்சம் பேசப்பட்டது. இந்தத் தொகையை ரொக்கமாக என்னிடமிருந்து பெற்றுக் கொண்டார் ஜெயச்சித்ரா.பணத்தை பெற்றுக் கொண்ட அவர் நிலத்தை கிரயம் செய்வது தொடர்பாக பதிவாளர் அலுவலகத்திற்கு என்னை வரச் சொன்னார்.நானும் போனேன், ஆனால் அவர் வரவில்லை. என்னிடம் விற்பதாக இருந்த நிலத்தை வேறு ஒருவருக்கு விற்க அவர் முடிவுசெய்துள்ளதாகத் தெரிகிறது.எனவே நான் கொடுத்த ரூ. 73 லட்சம் பணத்தை ஜெயச்சித்ராவிடமிருந்து பெற்றுத் தர வேண்டும் என்று கூறியுள்ளார் போத்ரா.
நடிகை ஜெயச்சித்ரா ரூ. 73 லட்சம் பணத்தை மோசடி செய்து விட்டதாக பிரபல திரைப்பட பைனான்சியர் குல்சந்த் போத்ரா புகார்கொடுத்துள்ளார்.
சென்னை செளகார்பேட்டையில் வசித்து வருபவர் போத்ரா. திரைப்படங்களுக்கு கடனுதவி செய்து வருகிறார். நடிகை ரோஜா மீதுஏற்கனவே பண மோசடி தொடர்பாக வழக்கு தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்தியவர் போத்ரா.
இந் நிலையில் சென்னை மாநகர மத்திய குற்றப் பிரிவு அலுவலகத்தில் இன்று ஒரு புகாரைக் கொடுத்தார் போத்ரா. அதில், நடிகைஜெயச்சித்ரா தனக்குச் சொந்தமான ஒரு தோட்டத்தை விற்பது தொடர்பாக என்னை அணுகினார்.
அந்தத் தோட்டத்தை நானே வாங்கிக் கொள்வதாக கூறினேன். இதுதொடர்பாக முன் பணம் கொடுத்தேன். நிலத்திற்கானதொகையாக ரூ. 73 லட்சம் பேசப்பட்டது. இந்தத் தொகையை ரொக்கமாக என்னிடமிருந்து பெற்றுக் கொண்டார் ஜெயச்சித்ரா.
பணத்தை பெற்றுக் கொண்ட அவர் நிலத்தை கிரயம் செய்வது தொடர்பாக பதிவாளர் அலுவலகத்திற்கு என்னை வரச் சொன்னார்.நானும் போனேன், ஆனால் அவர் வரவில்லை. என்னிடம் விற்பதாக இருந்த நிலத்தை வேறு ஒருவருக்கு விற்க அவர் முடிவுசெய்துள்ளதாகத் தெரிகிறது.
எனவே நான் கொடுத்த ரூ. 73 லட்சம் பணத்தை ஜெயச்சித்ராவிடமிருந்து பெற்றுத் தர வேண்டும் என்று கூறியுள்ளார் போத்ரா.


Click it and Unblock the Notifications