ரஜினிகாந்த் - மனோரமாவுக்கு இடையே மோதல் ஏற்பட அந்த பிரபலம் தான் காரணமா?.. ரமேஷ் கண்ணா பளிச்!
சென்னை: அஜித் குமாரை வைத்து தொடரும் படத்தை இயக்கிய ரமேஷ் கண்ணா தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்தும், திரைக்கதை ஆசிரியராக பணியாற்றியும் உள்ளார். கே.எஸ். ரவிக்குமார் உள்ளிட்ட பல்வேறு இயக்குநர்களுடன் பணியாற்றியுள்ளார். ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.
71 வயதாகும் ரமேஷ் கண்ணா சமீபத்தில், யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் ரஜினிகாந்த் மற்றும் மனோரமாவுக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனை குறித்தும் பேசியிருப்பது ரசிகர்களை ஷாக் ஆக்கியுள்ளது.

ரஜினிகாந்த் உடன் அண்ணாமலை, மன்னன் உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்த மனோரமாவுக்கும் ரஜினிகாந்துக்கும் என்ன பிரச்சனை என ஆர்வத்துடன் பார்த்து வருகின்றனர்.
ரமேஷ் கண்ணா: பாக்கியராஜ் இயக்கத்தில் வெளியான முந்தானை முடிச்சு படத்தில் அட்மாஸ்பியர் ஆர்ட்டிஸ்ட்டாக நடித்து சினிமாவில் அறிமுகமானவர் ரமேஷ் கண்ணா. காரைக்குடி நாராயணன், பாண்டியராஜன், கே.எஸ். ரவிக்குமார், விக்ரமன் உள்ளிட்ட பல இயக்குநர்களிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய ரமேஷ் கண்ணா அஜித், தேவயாணி நடித்த தொடரும் படத்தை இயக்கினார். அஜித்துடன் அமர்க்களம், வில்லன் உள்ளிட்ட படங்களில் பெரிதும் பேசப்பட்ட ரமேஷ் கண்ணா, விஜய்யுடன் பிரெண்ட்ஸ் படத்தில் நடித்த காமெடி காட்சிகளை ரசிகர்கள் அவ்வளவு எளிதில் மறந்து விட மாட்டார்கள். படையப்பா படத்திலும் இவரது கதாபாத்திரம் ரொம்பவே ரசிகர்களை கவர்ந்தது.

ரஜினி - மனோரமா மோதல்: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் பில்லா, மன்னன், எஜமான், அருணாச்சலம் என மெகா பிளாக்பஸ்டர் படங்களில் இணைந்து நடித்தவர் மனோரமா. ஒரு கட்டத்தில் ரஜினிகாந்துக்கும் அவருக்கும் இடையே மனஸ்தாபம் வந்து விட்டதாகவும், சில ஆண்டுகள் ரஜினிகாந்த் தனது படங்களில் மனோரமாவை நடிக்க வைக்க அனுமதிக்கவில்லை என்கிற சர்ச்சைகள் குறித்த கேள்விக்கு ரமேஷ் கண்ணா பதில் அளித்துள்ளார்.
ஜெயலலிதா தான் காரணம்: எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் படங்களில் நடித்து வந்த மனோரமா ஜெயலலிதாவின் விசுவாசியாகவே இருந்தார். அதன் காரணமாக அவருக்கும் ரஜினிகாந்துக்கும் சில பிரச்சனைகள் வெடித்தன. ஆனால், அதன் பின்னரும் ரஜினிகாந்த் தனது படங்களில் மனோரமாவை மீண்டும் நடிக்க வைத்தார். அந்த பிரச்சனைகள் எல்லாம் அப்பவே சரியாகி விட்டது என ரமேஷ் கண்ணா அந்த சர்ச்சைக்குரிய கேள்விக்கு தனது பேட்டியில் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.



Click it and Unblock the Notifications











