twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ”மறதி ஒரு தேசிய வியாதி”.. ஜெயலலிதா முதல் ஜெயப்பிரியா வரை.. மறக்கப்படும் மரணங்கள்.. பிரசன்னா கவலை

    |

    சென்னை: மர்ம மரணங்கள், கொடூர கொலைகள், பாலியல் வன்கொடுமை மரணங்கள் என ஒவ்வொரு செய்திக்கும் கொந்தளித்து ஹாஷ்டேக் போடுகிறோம், ஒரு வாரத்தில் அதனை மறந்து அடுத்த செய்திக்கு நகர்ந்து விடுகிறோம் என நடிகர் பிரசன்னா வேதனை தெரிவித்து ஒரு பதிவிட்டுள்ளார்.

    அருண் விஜய்யுடன் பிரசன்னா இணைந்து நடித்த மாஃபியா படம் இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியானது. கலவையான விமர்சனங்களை அந்த படம் பெற்றது.

    அடுத்ததாக நடிகர் விஷால் உடன் துப்பறிவாளன் 2 படத்தில் இணைந்து நடித்து வருகிறார்.

    அந்த 10 நாட்கள்.. மன ஆரோக்கியத்தைக் கடுமையாகப் பாதித்த கொரோனா.. வைரஸ் தாக்கிய டிவி நடிகை கவலை! அந்த 10 நாட்கள்.. மன ஆரோக்கியத்தைக் கடுமையாகப் பாதித்த கொரோனா.. வைரஸ் தாக்கிய டிவி நடிகை கவலை!

    ஹாஷ்டேக் நீதி

    ஹாஷ்டேக் நீதி

    சமூகத்தில் நடக்கும் பிரச்சனைகளுக்கும், அநீதிகளுக்கும் தற்போது பலவிதமான ஹாஷ்டேக்குகள் உருவாக்கப்பட்டு, பிரபலங்கள் அதற்கு கண்டனம் தெரிவித்து பதிவுகளை வரிசையாக இட்டு வருகின்றனர். அடுத்த பிரச்சனை வந்தவுடன் அடுத்த ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்ய தொடங்கி விடுகின்றனர். சில நேரங்களில் அரசுக்கு அழுத்தத்தையும் இந்த ஹாஷ்டேக்குகள் கொடுத்து வருவதை பார்த்து வருகிறோம்.

    தொடரும் சோகங்கள்

    தொடரும் சோகங்கள்

    ஏற்கனவே கொரோனா எனும் கொடிய பிரச்சனை உலக மக்களை வாட்டி வதைத்து வரும் நிலையில், ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணம், சிறுமி ஜெயப்பிரியா பலாத்காரம் என மேலும், பல சோகங்கள் தொடர்ந்து மக்களை வாட்டி வதைத்து வருகின்றன. பிரபலங்களும், தங்கள் கண்டனங்களை டிரெண்டாகும் ஹாஷ்டேக்கில் பதிவிட்டு வருகின்றனர்.

    பிரசன்னா கவலை

    பிரசன்னா கவலை

    இந்நிலையில், நடிகர் பிரசன்னா தனது டிவிட்டர் பக்கத்தில், ஜெயலலிதா அல்லது ஜெயராஜ் அல்லது ஜெயப்பிரியா, அடுத்த சென்ஷேஸ்னல் செய்தி வரும் வரை தான். கொலை, மரணம், பாலியல் பலாத்காரம் எல்லா செய்திகளும் அடுத்த ஹாஷ்டேக் டிரெண்ட் ஆகும் வரை தான்.

    தேசிய வியாதி

    தேசிய வியாதி

    ஆனால், அதற்கான உண்மையான நீதி கிடைத்ததா? என்றால் அதற்கு பதில் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். இதுபோன்ற நிகழ்வுகளை பார்த்து பார்த்து சோர்ந்து போய்விட்டேன். "மறதி ஒரு தேசிய வியாதி" என தனது கோபத்தையும், கவலையையும் பதிவிட்டுள்ளார். பிரசன்னாவின் கருத்தை பார்த்த பல நெட்டிசன்களும் பலவிதமாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

    அரசியல் அல்ல

    அரசியல் அல்ல

    பிரசன்னாவின் இந்த டிவீட்டை பார்த்த நெட்டிசன் ஒருவர், அரசியல் மாற்றம் நிகழ்ந்தால் மட்டுமே இந்த பிரச்சனை தீரும் என பதிவிட, அதற்கு பதிலளித்த பிரசன்னா, இது அரசியல் பிரச்சனை மட்டுமல்ல, சமூக பிரச்சனை, ஒவ்வொரு தனி மனிதனும் திருந்த வேண்டும், மோசமான மன நிலையை கொண்டிருக்கும் சிலர் உண்மையாகவே மாறினால் தான் நிலைமை சீராகும் எனக் கூறியுள்ளார்.

    ஜெயலலிதா மரணம்

    ஜெயலலிதா மரணம்

    ஜெயராஜ், பென்னிக்ஸ், ஜெயப்பிரியா என தொடரும் மரணங்களை பற்றி பதிவிடும் நேரத்தில், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான விசாரணையும் தள்ளிப் போய்க் கொண்டிருக்கிறது. அவரது மரணத்திற்கே நீதி கிடைக்கவில்லை என்பதை பிரசன்னா குறிப்பிட்டு உள்ளதையும் நெட்டிசன்கள் குறிப்பிட்டு, ஆம் மறதி ஒரு தேசிய வியாதி என கமெண்ட் செய்து வருகின்றனர்.

    English summary
    Prasanna tweeted, “Jayalalitha or jayaraj or jayapriya its only until the next sensational death/murder/rape news. Then the justice seeking hashtags change. But what has to actually change never change! Tired of all of this. Sadness creeps! "MARADHI ORU DESIYA VYAADHI".
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X