Don't Miss!
- News
ஆர்எஸ்எஸ், பாஜகவை உளவுபார்க்க.. ரிப்போர்டர்களை நியமிக்கும் பிஎப்ஐ? என்ஐஏ வைத்த 'ஷாக்' புகார்
- Lifestyle
வாய் துர்நாற்றத்திற்கு குட்-பை சொல்லணுமா? இதோ அதை தடுக்கும் சில இயற்கை வழிகள்!
- Sports
"அந்த ஒரு விஷயம்.. உலகில் சூர்யகுமாரிடம் மட்டுமே உள்ள திறமை.. ரிக்கிப் பாண்டிங் புகழாரம் - விவரம்
- Automobiles
டாடாவை கதையை முடிக்க பிளான்... ரயிலைபோல் அடுத்தடுத்து ஆறு எலெக்ட்ரிக் கார்களை களமிறக்கு போகிறது மாருதி சுஸுகி!
- Finance
2 நாளில் 12 லட்சம் கோடி ரூபாய் அவுட்.. சென்செக்ஸ் 800 புள்ளிகளுக்கு மேல் சரிவில் முடிவு..!
- Technology
விஷத்தை வெளியேற்றுகிறதா வாட்டர் ஹீட்டர்கள்? பகீர் நிகழ்வால் மக்கள் பீதி.! உண்மை என்ன?
- Travel
சூரிய சுற்றுலாவா? இது என்ன புதிய சுற்றுலாவா இருக்கே – இதை பார்க்க எங்கு செல்வது?
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
என் கேரக்டரில் இவர் நடித்தால் சரியாக இருக்கும்.. ஜெயலலிதாவே தேர்வு செய்த நடிகை யார் தெரியுமா?
Recommended Video

சென்னை: ஜெயலலிதா கேரக்டரில் நடிக்க நடிகைகள் போட்டி போட்டாலும் தனது கேரக்டரில் இவர் நடித்தால் சரியாக இருக்கும் என 1999ஆம் ஆண்டே ஜெயலலிதா ஒரு நடிகையை தேர்வு செய்துள்ளார்.
ஜெயலலிதா தமிழக அரசியல் மட்டுமின்றி தேசிய அரசியலிலும் தவிர்க்க முடியாத தலைவராக இருந்தவர். ஜெயலலிதாவின் வாழ்க்கை முழுவதும் முற்களால் நிரம்பியது.
இரும்புப் பெண்மணி, தன்னம்பிக்கையின் தாரக மந்திரம், துணிச்சலின் சிகரம் என தமிழக அரசியலின் அடையாளமாய் திகழ்ந்தவர் ஜெயலலிதா.

நட்சத்திரமாக ஜொலித்தவர்
அரசியல் மட்டுமின்றி திரைத்துறையிலும் நட்சத்திரமாக ஜொலித்தார் ஜெயலலிதா. நடிப்பு, நடனம், சண்டைக்காட்சிகள், இசை என அவர் கை வைக்காத துறையே இல்லை.

பன்முகங்களை கொண்டவர்
ஜெயலலிதா சிறந்த எழுத்தாளரும் ஆவார். வார இதழுக்கு தொடர்கதை எழுதியுள்ளார். இப்படி பன்முகங்களை கொண்டவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா.

மொழி வல்லமை
மொழி ஆளுமை மிக்கவர். தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, கன்னடம் என தென்னிந்திய மற்றும் வட இந்திய மொழிகளிலும் வல்லமை பெற்றவர்.

வாழ்க்கை வரலாறு படம்
கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் காலமானார். இதைத்தொடர்ந்து அவரது வாழ்க்கை வரலாறு படமாக்கப்படவுள்ளதாக தகவல் வெளியானது.

விஜய் இயக்குகிறார்
இந்த படத்தை மதராசபட்டிணம், தலைவா, தெய்வத்திருமகள் ஆகிய படங்களை இயக்கிய விஜய் இயக்க உள்ளார்.

பாலிவுட் நடிகைகள்
இந்நிலையில் திரைப்படத் தயாரிப்பாளர் விஷ்ணு இந்துரி சமீபத்தில் இந்த திட்டம் குறித்து தெரிவித்து இருந்தார். ஜெயலலிதா வேடத்தில் நடிக்க தீபிகா படுகோனே, தபு, வித்யா பாலன், ஆகியோர் பரிசீலிக்கப்பட்டு வருகின்றனர்.

வித்யாபாலன்
இதுதொடர்பாக மிட் டே இதழ் வெளியிட்டுள்ள தகவலில், வித்யாபாலன் ஏற்கனவே என்.டி.ஆர். வாழ்க்கை வரலாற்றில் - கதாநாயகனின் மனைவி பசவதாரகமாக நடித்து வருகிறார். அதனால் தயாரிப்பாளர்கள் ஏற்கனவே அவருடன் தகவலை பகிர்ந்து கொண்டுள்ளார்.

ஜெ. தேர்வு செய்த நடிகை
ஆச்சரியமாக, ஐஸ்வர்யா ராய் பச்சன் இதுவரை இந்த வேடத்திற்காக அணுகப்படவில்லை என தெரிவித்துள்ளது.
1999 ஆம் ஆண்டு சிமி கார்வலின் பேட்டியின் போது ஜெயலலிதா தனது கேரக்டரில் நடிக்க ஐஸ்வர்யா ராய் சரியாக இருப்பார் என கூறி இருந்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பன்மொழி படம்
ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படத்திற்கு ஒரு பாலிவுட் நடிகையை எதிர் பார்ப்பதாக தயாரிப்பாளர் இந்தூரி தெரிவித்துள்ளார். இது ஒரு தேசிய, பன்மொழி படம். இந்த கதை இந்தியா முழுவதும் பயணிக்க வேண்டும் என்றும் ஜெயலலிதா தமிழ்நாட்டின் முதல்வராக இருந்தபோதிலும், அவரது கதையானது உலகளாவிய முறையீடு என்றும் அவர் கூறியுள்ளார்.

முன் பணிகள்
தாங்கள் இரண்டு மூன்று சிறந்த பாலிவுட் நடிகைகளை அணுகினோம் என்று கூறியுள்ள இந்தூரி இயக்குனர் விஜய் படத்தின் முன் தயாரிப்பு பணிகளை கவனித்து வருகிறார் என்று தெரிவித்துள்ளார்.