twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஒரு கோடி கூட தாண்டல.. அதள பாதாளத்திற்கு சென்ற தலைவி முதல் நாள் வசூல்.. என்ன காரணம்?

    |

    சென்னை: ஜெயலலிதாவின் பயோபிக் மீண்டும் தியேட்டர்களுக்கு விடியலை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்தியளவில் தலைவியின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் அதள பாதாளத்திற்கு சென்றுள்ளதாக அதிர்ச்சிகரமான ரிப்போர்ட்டுகள் வெளியாகி உள்ளன.

    இயக்குநர் ஏ.எல். விஜய் இயக்கத்தில் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத், அரவிந்த் சாமி, சமுத்திரகனி, நாசர் உள்ளிட்ட பலர் நடிப்பில் நேற்று (செப்டம்பர் 10) திரையரங்குகளில் வெளியான படம் தலைவி.

    ரஷ்ய படப்பிடிப்பை முடித்த அன்பறிவு படக்குழு புகைப்படத்தை வெளியிட்டது !ரஷ்ய படப்பிடிப்பை முடித்த அன்பறிவு படக்குழு புகைப்படத்தை வெளியிட்டது !

    மல்டிபிளக்ஸ் போட்ட தடை, கொரோனா பரவல் அச்சம் மற்றும் நடிகர்கள் தேர்வு என பல சிக்கல்களால் தலைவியின் வசூல் இப்படி அடிமட்டத்திற்கு சென்றுள்ளதாக கூறுகின்றனர்.

    20 கோடி வரை எதிர்பார்ப்பு

    20 கோடி வரை எதிர்பார்ப்பு

    தலைவியின் பில்டப் விளம்பரங்கள் மற்றும் பான் இந்தியா ரிலீஸ் என பலவற்றை பார்த்து படம் முதல் நாளே 20 கோடி முதல் 25 கோடி வரை வசூலிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்த அளவுக்கு தலைவியின் வசூல் திரையரங்குகள் வாயிலாக வந்திருப்பது ஒட்டுமொத்த சினிமா துறைக்கே பேரதிர்ச்சியாக மாறி உள்ளது.

    உலகம் முழுவதும் ரிலீஸ்

    உலகம் முழுவதும் ரிலீஸ்

    நாடு முழுவதும் தலைவி திரைப்படம் 1500 ஸ்க்ரீன்களில் திரையிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், வெளிநாடுகளில் 200 திரைகளில் இந்த படம் நேற்று வெளியானது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பயோபிக் திரைப்படம் என்பதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவிய நிலையில், படத்தின் வசூல் ஒரே அடியாக சரிந்திருப்பது படக்குழுவை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

    முதல் நாள் வசூல் எவ்வளவு

    முதல் நாள் வசூல் எவ்வளவு

    நாடு முழுவதும் பல கோடிகளை திரையரங்குகள் மூலமாக தலைவி ரிலீஸ் செய்யும் என்கிற நம்பிக்கையுடன் தான் பல பிரச்சனைகளை கடந்து தலைவி படத்தை திரையரங்குகளில் வெளியிட்ட நிலையில் முதல் நாள் வசூலாக 40 முதல் 50 லட்சம் வரை தான் வசூலித்துள்ளதாக அதிர்ச்சிகரமான ரிப்போர்ட்கள் வெளியாகி உள்ளன.

    சென்னைக்கு வந்து புரமோஷன்

    சென்னைக்கு வந்து புரமோஷன்

    நடிகை கங்கனா ரனாவத் தலைவி படத்தின் ரிலீஸை முன்னிட்டு சென்னைக்கு வந்து மெரினா கடற்கரையில் ஜெயலலிதா, எம்ஜிஆர் மற்றும் கருணாநிதி உள்ளிட்ட தலைவர்களுக்கு மரியாதை செலுத்தினார். மேலும், பிரத்யேக பிரஸ்மீட், ப்ரிவியூ ஷோ என ஏகப்பட்ட விளம்பரை மேற்கொண்டும் தியேட்டருக்குள் ரசிகர்களை கொண்டு வர கங்கனா ரனாவத்தால் முடியவில்லை.

    ஏன் இப்படி

    ஏன் இப்படி

    அக்‌ஷய் குமாரின் பெல்பாட்டம் படத்தின் வசூலை விட அதளபாதாளத்திற்கு கங்கனா ரனாவத்தின் தலைவி படத்தின் வசூல் செல்வதற்கு ஏகப்பட்ட காரணங்கள் உள்ளன. ஜெயலலிதா கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகையை போட்டது. பாலிவுட்டிலும் ஏகப்பட்ட பிரச்சனைகளை கங்கனா உருவாக்கி வைத்திருப்பது. ட்விட்டரில் இருந்து கங்கனா ரனாவத் நீக்கப்பட்டது ஒடிடியில் நாடு முழுவதும் பல படங்கள் ரிலீஸ் ஆனது மற்றும் கொரோனா அச்சுறுத்தல் என பல காரணங்கள் உள்ளன.

    மக்களை வரவைத்த மாஸ்டர்

    மக்களை வரவைத்த மாஸ்டர்

    கடந்த ஆண்டும் இதே போன்ற நிலைமை நிலவியது. நடிகர் சூர்யாவின் சூரரைப் போற்று மற்றும் நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் உள்ளிட்ட படங்கள் தியேட்டருக்கே வராமல் ஒடிடிக்கு ஓடிப்போனதற்கும் இதுதான் காரணம் என்கின்றனர். ஆனால், மீண்டும் தியேட்டருக்கு மக்களை வரவைத்த படம் என்றால் அது இந்த ஆண்டு பொங்கலுக்கு வெளியான தளபதியின் மாஸ்டர் தான்.

    அண்ணாத்த செய்வாரா

    அண்ணாத்த செய்வாரா

    சிவகார்த்திகேயனின் டாக்டர் திரைப்படம் அக்டோபர் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தாலும், இன்னமும் ரிலீஸ் தேதியை அறிவிக்க படக்குழு தயங்குகிறது. அஜித்தின் வலிமை படமும் ரிலீஸ் தேதியை உறுதி செய்யவில்லை. இந்நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அண்ணாத்த திரைப்படம் தீபாவளிக்கு கன்ஃபார்ம் ஆகி உள்ள நிலையில், மாஸ்டரை போல அண்ணாத்த படமும் ரசிகர்களை தியேட்டருக்கு கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    English summary
    Former Chief Minister of Tamil Nadu Jayalalitha biopic movie ‘Thalaivi’ first day box office collection reports upset Producers and Theater Owners.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X