ஜெ.வை பற்றி வெப் சீரிஸ்.. யாரை கேட்டு எடுத்தீர்கள்.. கெளதம் மேனனுக்கு எச்சரிக்கை விடுக்கும் தீபக்!

மறைந்த முதல்வர் ஜெயலலிதா குறித்து இயக்குனர் கெளதம் மேனன் எடுக்கும் வெப் சீரிஸுக்கு ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

Recommended Video

ஜெயலலிதாவின் வாழ்க்கையும் என் வாழ்க்கையும் ஒரே மாதிரியானது தான்- நடிகை கங்கனா- வீடியோ

சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதா குறித்து இயக்குனர் கெளதம் மேனன் எடுக்கும் வெப் சீரிஸுக்கு ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

பாலிவுட் தொடங்கி கோலிவுட் வரை அனைத்து மொழியிலும் தற்போது பயோ பிக் படங்கள் அதிக முக்கியத்துவம் பெறுகிறது. வரிசையாக பலருடைய பயோ பிக் படங்கள் வெளியாகி வருகிறது.

பயோ பிக் படங்கள் எளிதாக வெற்றிபெறும் என்பதாலும், மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும் என்பதாலும் இயக்குனர்களும் இது போன்ற படங்களை எடுக்க ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

ஜெயலலிதா படம்

ஜெயலலிதா படம்

இந்த நிலையில்தான் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்க பல இயக்குனர்கள் முயன்று வருகிறார்கள். இயக்குனர் ஏஎல் விஜய் ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றை கங்கனா ரனாவத் வைத்து எடுக்க உள்ளார். அதேபோல் சர்ச்சைக்குரிய இயக்குனர் ராம் கோபால் வர்மா ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்க உள்ளார்.

இன்னும் சிலர்

இன்னும் சிலர்

அதேபோல் இன்னும் சில பாலிவுட் இயக்குனர்களும் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை படமாக இயக்க திட்டமிட்டு வருகிறார்கள். இன்னொரு பக்கம் ஜெயலலிதா குறித்து இயக்குனர் கெளதம் மேனன் வெப் சீரிஸ் ஒன்று எடுத்து வருகிறார்.

யார் எல்லாம்

யார் எல்லாம்

ஜெயலலிதா குழந்தை கதாபாத்திரத்தில் ‘விஸ்வாசம்' படத்தில் அஜித் மகளாக நடித்த அனிகா நடித்து வருகிறார். அதேபோல் இளம் பருவ ஜெயலலிதா கெட்டப்பிற்கு ரம்யா கிருஷ்னன் நடித்து வருகிறார். இதில் சசிகலா பாத்திரம் கிடையாது.

எப்படி இருக்கும்

எப்படி இருக்கும்

ஜெயலலிதா சினிமாவில் இருந்தது, அரசியலுக்கு வந்தது, முதல்வர் ஆனது, சொத்து குவிப்பு வழக்கு, சர்ச்சைகள் என்று அனைத்தையும் சீரிஸாக எடுக்க இருக்கிறார் கெளதம் மேனன். இதற்கு குயின் என்று பெயர் வைத்துள்ளனர். கிடாரி படத்தின் இயக்குனர் பிரசாந்த் முருகேசன் இதில் இன்னொரு இயக்குனராக செயல்படுகிறார்.

ஆனால் என்ன

ஆனால் என்ன

இந்த நிலையில் ஜெயலலிதா குறித்து இயக்குனர் கெளதம் மேனன் எடுக்கும் வெப் சீரிஸுக்கு ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஜெயலலிதா குறித்து எங்களிடம் அனுமதி வாங்காமல் படம் எடுக்கிறார்கள். நாங்கள் இருக்கும் போது அவர்கள் எங்களிடம் ஒரு வார்த்தை கூட கேட்கவில்லை.

கெளதம் மேனன்

கெளதம் மேனன்

கெளதம் மேனன் தொடங்கி யாராக இருந்தாலும் எங்களிடம் அனுமதி பெறாமல் படமோ, சீரிசோ எடுப்பது தவறு. இதை எங்களால் அனுமதிக்க முடியாது என்று தீபக் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X