பிரபு மகனை வாழ்த்திய ஜெயலலிதா, கருணாநிதி!

By Shankar

ஹீரோவாக அறிமுகமாகும் பிரபுவின் மகன் விக்ரம் பிரபுவை, தமிழக முதல்வர் ஜெயலலிதாவும், முன்னாள் முதல்வர் கருணாநிதியும் வாழ்த்தினர்.

சிவாஜியின் குடும்பத்திலிருந்து மேலும் ஒரு நடிப்பு வாரிசாக கும்கி படத்தில் அறிமுகமாகிறார் விக்ரம் பிரபு.

இதற்கு முன், சிவாஜிக்குப் பிறகு, அவர் மகன்கள் பிரபு, ராம்குமார், பேரன் துஷ்யந்த், பேரன் என்று வெளிப்படையாக அறிவிக்காவிட்டாலும் சிவாஜி குடும்ப வாரிசு என்ற அடைமொழியோடு வந்துள்ள சிவாஜி தேவ் என பலரும் நடிக்க வந்துவிட்டார்கள்.

இப்போது அடுத்ததாக வந்திருப்பவர்தான் விக்ரம் பிரபு.

இவரை முறைப்படி இன்று ஹீரோவாக அறிமுகம் செய்து வைத்தனர் தமிழ் சினிமாவின் பெருமைகளான ரஜினியும் கமலும்.

இதுபற்றிக் குறிப்பிட்ட நடிகர் பிரபு, எங்கள் வீட்டில் இரு பெரிய தந்தங்கள் உண்டு. அண்ணன் ரஜினியும் கமலும்தான் அந்த தந்தங்கள். என் மகன் அறிமுகமாகும் படத்தில், யானையின் இரு தந்தங்களைப் பிடித்த ஏறி யானையின் நெற்றியில் முத்தமிடுகிறான். அந்த தந்தங்களாக நான் ரஜினி, கமலைப் பார்க்கிறேன். அந்த நெற்றி யானையுடையதல்ல... அப்பா சிவாஜிதான் என்றே நான் நினைக்கிறேன், என்றார்.

அப்படி அறிமுகம் செய்து கொண்டிருந்தபோதே... அவருக்கு இரு செய்திகள் வந்தன.

ஒன்று முதல்வர் ஜெயலலிதாவிடமிருந்து. "உங்கள் மகன் திரையுலகில் வெற்றி மேல் வெற்றி குவிக்க வாழ்த்துகள்" என்று ஜெயலலிதா வாழ்த்தியதாக பிரபு குறிப்பிட்டார்.

மற்றொரு வாழ்த்துக்கு சொந்தக்காரர் முன்னாள் முதல்வர் கருணாநிதி. (பதவியில் இருந்திருந்தால் அவர் தலைமையில்தான் விழாவே நடந்திருக்கும்). விக்ரம் சிறப்பாக வர வாழ்த்துகள் என்றும், படத்தை பின்னர் தனக்கு போட்டுக்காட்டுமாறும் பெரியப்பா கருணாநிதி வாழ்த்தினார் என்றார் பிரபு.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X