ஜெயலலிதா நடித்த ஒரே இந்திப்படத்தில் பாடியவர்...ஜெயலலிதா அடிக்கடி முணு முணுத்த லதாமங்கேஷ்கர் பாடல்...
சென்னை : லதா மங்கேஷ்கர் என்ற இசைக்குயில் நம்மைவிட்டு பிரிந்து நம்மை தீராத சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
லதா மங்கேஷ்கர், பல்வேறு இந்திய மொழிகளில் பாடல்களை பாடியிருந்தாலும், தமிழிலும் அவர் அற்புதமான பாடல்களை பாடியிருக்கிறார். அந்த பாடல்களை 80களின் பிற்பகுதியில் பிறந்தவர்கள் மறந்திருக்க வாய்ப்பு இல்லை.
லதா மங்கேஷ்கரின் குரலின் மேல் அளவற்ற அன்பு வைத்திருந்தவர் செல்வி ஜெயலலிதா. அவர் அடிக்கடி முணுமுணுத்து பாடிய பாடலைப் பற்றிய சுவாரஸ்ய தகவல்.

லதா மங்கேஷ்கர்
இந்தியாவின் கானக்குயில் லதா மங்கேஷ்கர் தேன் போன்ற குரலுக்கு சொந்தக்காரி. பாடலில் எத்தனை நளினம், மயக்கத்தை புகுத்தி பல கோடி மக்களை கிறங்கவைக்க தெரிந்த மாயாவி. எந்த மொழியில் பாடினாலும் அந்த குரலின் வசீகரமே பாடலில் மேலோங்கி இருக்கும்.

''ஆஜா சனம்"
உலகத்தையே தனது குரலால் கட்டிப்போட்டு ரசிகர்களின் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்து கொண்டிருந்தவர் லதா மங்கேஷ்கர். சோரி சோரி திரைப்படத்திற்காக இவர் பாடிய ''ஆஜா சனம் மதுர் சாந்தினி மே ஹம்'' என்ற பாடல் செல்வி ஜெயலலிதாவிற்கு மிகவும் பிடித்த பாடல். இந்த பாடல் ஜெயலலிதா வீட்டில் எப்போதும் பாடிக்கொண்டே இருப்பாராம். அதேபோல ஆஜா சனம் என்ற பாடலை எந்தநேரமும் முணுமுணுத்துக்கொண்டே இருப்பார்.

வரவேற்பை பெற்ற பாடல்
தமிழகத்தில் கொடி கட்டி பறந்த ஜெயலலிதா, இந்தியில் இஸ்ஸாத் என்ற ஒரே ஒரு திரைப்படத்தில் தான் நடித்துள்ளார். இதில் அவருக்கு ஜோடியாக தர்மேந்திரா நடித்திருந்தார். அந்த படத்தில் மொத்தம்7 பாடல்கள் இதில் 4 பாடல்களை லதா மங்கேஷ்கர் ஜெயலலிதாவுக்காக சோலோவாக பாடி இருப்பார். இதில் அனைததுப் பாடல்களும் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றன.

பூமி உள்ளளவும் வாழ்வார்
இந்தியாவின் கானக்குயில் லதா மங்கேஷ்கர் தேன் போன்ற குரலுக்கு சொந்தக்காரர். பாடலில் எத்தனை நளினம், மயக்கத்தை புகுத்தி பல கோடி மக்களை கிறங்கவைக்க தெரிந்த மாயவி. எந்த மொழியில் பாடினாலும் அந்த குரலின் வசீகரமே பாடலில் மேலோக்கி இருக்கும்.


Click it and Unblock the Notifications











